Friday, March 3, 2017

ஸ்லோ குக்கர் இறைச்சி சோறு / Slow cooker Erachi choru / Malabar Meat Rice / Veg Rice

மட்டன் அல்லது பீஃப் இறைச்சி சோறு:-

தேவையான பொருட்கள்;-
பாசுமதி அல்லது சீரக சம்பா - 400 கிராம் ( 2 கப்)
நெய் - 50 மில்லி 
ஏலம், பட்டை சிறிய துண்டாக ,கிராம்பு - தலா 4
ஊற வைக்க:-
எண்ணெய் - 50 மில்லி( தேங்காய் எண்ணெய் அல்லது விரும்பும் எண்ணெய்)
மட்டன் அல்லது பீஃப் அல்லது சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் நறுக்கியது பெரியது - 2
இஞ்சி பூண்டு தலா ஒன்னரை - 2 டேபிள்ஸ்பூன் -மிகப் பொடியாக நறுக்கியது அல்லது தட்டியது
பச்சை மிளகாய் - 3 கீரியது அல்லது தட்டியது
( தனித்தனியாக நறுக்காமல்  வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து கூட சாப்பரில் பர பரப்பாக சாப் செய்து எடுத்து உபயோகிக்கலாம்.)
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
கரம் மசாலா- அரைடீஸ்பூன்
சிறிய எலுமிச்சை - 1
தயிர் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நறுக்கிய மல்லி புதினா ஒரு கையளவு
உப்பு- தேவைக்கு.
(இதன் முக்கிய பக்குவமே வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு ,மல்லி புதினா,பச்சை மிளகாய்,மசாலா வகைகள் எல்லாம் சேர்த்து இறைச்சியுடன் கலந்து ஊறவிட்டு வேக வைத்து பின்பு அரிசியை தட்டி தம் போடுவது தான்.)
செய்முறை:-
ஸ்லோ குக்கரை முற்சூடு செய்யவும்.
ஊற வைக்கச் மேற் சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஸ்லோகுக்கரில் ஊற வைத்த இறைச்சியை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். 2-3 மணி நேரம். பஞ்சு பஞ்சாக வெந்து வரும்.
அரிசியை அரை - 1 மணி நேரம்  ஊற வைக்கவும்.
ஊற வைத்த அரிசியை  நீரில் தேவைக்கு, உப்பு ,ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கும் பொழுது போட்டு நறுக்கிய மல்லி,புதினா கொஞ்சம் சேர்த்து  அரை வேக்காடாக வடித்து எடுக்கவும்.

வடித்த அரிசியை வெந்த இறைச்சி மீது போடவும். நெய் மேலே சேர்த்து மூடவும்.

மூடி ஸ்லோவில் வைத்து 20  நிமிடம் தம் செய்து எடுக்கவும்.
திறந்து பிரட்டி விட்டு, மூடி சூடு மோடில் வைத்து பின்பு  பரிமாறவும்.

சிக்கன் இறைச்சி சோறு:-
மேற் சொன்ன அனைத்தும் சேர்த்து ஊற வைக்கவும்.

 மூடி ஸ்லோவாக 2 மணி நேரம் வேக  விடவும்.

 வெந்து இப்படி இருக்கும். நான் சிக்கனை தோலோடு சமைத்துப் பார்த்தேன். எங்களுக்கு அவ்வளவாக பிடிக்கலை. தோல் நீக்கி விட்டு சமைக்கவும்.உப்பு புளிப்பு சரிபார்க்கவும். லெமன் பிழியவும்.
 அரிசிக்கு 1;2 விகிதத்தில் தண்ணீர் வைத்து அரிசியை தட்டவும். நெய் சேர்க்கவும்.
மூடி 20 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
 சூப்பராக பொல பொலன்னு வெந்து காணப்படும்.
பிரட்டி விட்டுப் பரிமாறவும்.
சுவையான சிக்கன் இறைச்சி சோறு தயார்.
பிரியாணி தான்.பெயர் தான் வேறு.

ஸ்லோ குக்கர் வெஜ் பிரியாணி :-


தே.பொ:-
காய்கறிகள் -நறுக்கிய  கேரட்,பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு. எல்லாம் சேர்த்து- கால் கிலோ
பாசுமதி அரிசி - கால் கிலோ ( கால் மணி நேரம்  ஊற வைக்கவும்)
எண்ணெய்  -  3 டேபிள்ஸ்பூன்,  நெய் -  1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
மீடியம் சைஸ் வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
கரம் மசாலா- அரைடீஸ்பூன்
சிறிய எலுமிச்சை பாதி - 1
தயிர் - 2 டேபிள்ஸ்பூன் 
நறுக்கிய மல்லி புதினா ஒரு கையளவு
உப்பு- தேவைக்கு.
 செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கி, இஞ்சி பூண்டு  சேர்த்து நன்கு வதக்கவும், தக்காளி ,பச்சை மிளகாய்  சேர்க்கவும், உப்பு சேர்த்து வதங்க விடவும். அனைத்து மசாலா பொருட்கள் சேர்க்கவும்.காய்கறிகள் சேர்க்கவும். தயிர் சேர்த்து கிளறவும்.
.

முற்சூடு செய்த ஸ்லோ குக்கரில் விடவும்.அரிசி அளவு ஒன்றுக்கு இரண்டு தண்ணீர் வைக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

ஊறிய அரிசி சேர்த்து மூடவும்.

அரிசியும் காய்கறிகளும் சேர்ந்து வரும் பொழுது எலுமிச்சை பிழியவும். நெய் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து மூடவும்.விரும்பினால் அலுமினியம் ஃபாயில் கவர் செய்யலாம்.
இருபது நிமிடம் கழித்து ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.

சுவையான ஸ்லோகுக்கர் தம் வெக் பிரியாணி தயார்.

குறிப்பு:-
இந்த செராமிக் பாட் மட்டும் கழுவினால் போதும் பாத்திரம் கழுவும் வேலை மிச்சம்.சிக்கனோ மட்டனோ வேக போட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்.

1 comment:

Angelin said...

வெஜ் பிரியாணி பார்க்கவே சூப்பர் ..நான் யோசிச்சேன் ஸ்லோ குக்கரில் அசைவ இறைச்சி மட்டுமே செய்யலாம்னு ,பகிர்வுக்கு நன்றி ஆசியா ..