Wednesday, April 19, 2017

கிரீன் / பிரியாணி ஆம்லெட் / Green / Briyani omlette

 ஒரு சில நேரம் டிஃபன் செய்ய சோம்பல் வரும் பொழுது ஈசியாக முட்டை ஆம்லெட் செய்து சாப்பிடுவதுண்டு.சிறிய சிறிய மாற்றத்துடன் செய்வேன்.
முட்டை ஆம்லட் தானேன்னு கிளிக் செய்வதில்லை.முட்டை பொரிக்கிற கலத்தில் ஆம்லட் கலவையை ஊற்றும் பொழுது தான் திடீர்னு நினைவு வந்து கிளிக் செய்தேன்.
தேவையான பொருட்கள்:-
பெரிய முட்டை - 2 அல்லது 4
எண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மல்லி,புதினா, கருவேப்பிலை - சிறிது
வெங்காயம் - சிறியது 1
( பச்சை மிளகாய்,மல்லி,புதினா,கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பரபரவென  மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா விரும்பினால் ( பின்ச்)
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரைடீஸ்பூன்
விரும்பினால் பொடியாக தக்காளி நறுக்கி சேர்க்கலாம்.(நான் இதில் சேர்க்கவில்லை ..அது தனியாக தக்காளி ஆம்லெட் செய்து சாப்பிடலாம்)
உப்பு தேவைக்கு.
செய்முறை:-
 முட்டையுடன் அரைத்த கலவை, உப்பு,மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா(விரும்பினால்) சேர்த்து கலந்து அடித்து வைக்கவும்.
 முட்டை பொரிக்கிற கலம் சூடானவுடன் நெய் விடவும்.கலம் முழுவதும்
கலவையை பரவலாக விடவும்.

 திருப்பி போடவும். இரு புறமும் திருப்பி  வெந்தவுடன் எடுக்கவும்.
 அப்படியே சூடாக தட்டில் எடுத்து பரிமாறவும்.
இதனை பிரியாணி ஆம்லெட் என்று கூட சொல்லலாம்.
பச்சையாக இருப்பதால் கிரீன் ஆம்லெட் என்றேன்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நன்றி...

athira said...

இது கிட்டத்தட்ட பத்திய முட்டைப்பொரியல்போல இருக்கு.. ஏஜ் அட்ரேன் பண்ணிய குழந்தைகளுக்கும், குழந்தை கிடைத்த நேரம் அம்மாவுக்கும் இப்படிச் செய்து.. நல்லெண்ணெயில் பொரித்து கொடுப்பது வழக்கம் ஊரில்.