Thursday, April 13, 2017

பராசப்பம் / Parasappam

பராசப்பத்தை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாகச் செய்வார்கள். இது எங்க ஊரு ஸ்பெஷல்.



தேவையான பொருட்கள்:-
மாவு தயாரிக்க:-
புழுங்கல் அரிசி - ஒரு கப்
பச்சை அரிசி - ஒரு கப்
உளுந்து - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - பாதி காய்.  

முதலில் அரிசி,உளுந்து வெந்தயம்,கடலை பருப்பு சேர்த்து ஊற வைக்கவும். தேங்காய் துருவி வைத்துக் கொள்ளவும்.
நன்கு சுமார் 4 மணி நேரம் ஊறிய பின்பு முதலில் ஊறிய வற்றை சேர்த்து அரைக்கவும்.அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்து  எடுத்து மூடி வைக்கவும். எட்டு மணி நேரம் இருக்க வேண்டும்.

 மாவுடன் சேர்க்க மறுநாள் ;-
முட்டை  1 அல்லது 2
ரவை - ஊறவிட்டது - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

தயார் ஆன அரைத்த மாவுடன் முட்டை,ரவையைச் சேர்த்து  கலக்கவும்.


இனி கொத்துக்கறி மசாலா தயார் செய்ய வேண்டும்.
மட்டன் அல்லது சிக்கன் கொத்தியது - 200 கிராம்  எடுத்துக் கொள்ளலாம்,
ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விடவும்.
கால் கிலோ பொடியாக நறுக்கிய வெங்காயம்  சேர்த்து வதக்கவும். 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்  சேர்க்கவும், கரம் மசாலா அரைடீஸ்பூன் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், ஒரு தக்காளி  சேர்க்கவும்  நறுக்கிய மல்லி, புதினா இலை சேர்க்கவும். கொத்துக்கறி சேர்க்கவும்.  ஊர் மசாலா 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு மூடி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து  2  -3 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
ஆறிய பின்பு  நாம் முட்டை ,ரவை கலந்த ஆட்டிய மாவில் தயார் செய்த கொத்துக்கறி மசாலாவைக் கொட்டவும்.
நன்கு ஒரு சேரக் கலந்து தோசை மாவு பதத்தில் வருமாறு தயார் செய்யவும்,உப்பு சரிபார்க்கவும். நல்ல மணமாக இருக்கும்.

இனி எண்ணெய் நெய் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

தோசைச் கலத்தில்  மாவை விட்டு வட்டமாக மெல்லிய அல்லது கனத்த பராசப்பமாகச் சுட்டு எண்ணெய் நெய் மேலே லேசாக விட்டு சிவற பராசப்பத்தைச் சுட்டு அடுக்கவும்.
சுவையான பராசப்பம் தயார்.

இது கறி சால்னாவுடன் பரிமாற சூப்பராக இருக்கும். 








1 comment:

மனோ சாமிநாதன் said...

இது வித்தியாசமான பராசப்பமாக இருக்கிரது ஆசியா! செய்து பார்க்க வேண்டும். ஒரே ஒரு குறை. பராசப்பம் தெளிவாகத்தெரியவில்லை!