Friday, April 28, 2017

வெட்டு கேக் / Vettu cake

தேவையான பொருட்கள்:-
மைதா - 350 கிராம்
சீனி - 150 கிராம்  + 2 ஏலக்காய் பொடித்துக் கொள்ளவும்
முட்டை - 1
வெண்ணெய் - 50 கிராம்
பால் - 50 மில்லி
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - பின்ச்.
ரெசிப்பி பகிர்வு :-
சிராஜ் முனீரா. Share your recipes பகிர்வுக்கு மிக்க நன்றி.

செய்முறை:-
நான் முயற்சி செய்தேன் சூப்பராக வந்தது.  இதோ படங்களுடன் குறிப்பு.
மேற்சொன்ன அளவில்  பவுலில் மைதா , சோடா உப்பு நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு வெண்ணெய்,முட்டை, சீனி, பால் சேர்த்து மாவை பிணைந்து கொள்ளவும்.
 அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
பின்பு ஒரு போல் உருண்டைகளாக பிரிக்கவும்.

 எண்ணெய் சூடு செய்யவும். மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டு சுடவும். கேக் வெட்டு பட்டது போல் பிளந்து காணப்படும்.
பொன்னிறமாக சிவந்து வெந்து வரும் பொழுது எண்ணெய் வடித்து எடுக்கவும்.



சுவையான வெட்டு கேக் தயார்.
ஊரில் டீக்கடையில் வடையுடன் இதுவும் விற்பனைக்கு இருக்கும்.
எப்பவாவது விரும்பினால் வீட்டில் செய்து சாப்பிடலாம்.

சூப்பர் டேஸ்ட் :) !

1 comment:

துளசி கோபால் said...

ஒருநாள் செஞ்சு பார்த்துட்டுச் சொல்றேன் :-)