Friday, May 26, 2017

சிக்கன் ஹரீஸ் (ஸ்லோ குக்கர் முறை) / Chicken Harees ( slow cooker method)

 தேவையான பொருட்கள்;-
முழுக் கோதுமை அல்லது உடைத்தது - 200 கிராம்
சிக்கன் - 400 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் குவியலாக
கரம் மசாலா விரும்பினால் ஒரு பெரிய பின்ச்
பச்சை மிளகாய் - 2
ஆலிவ் ஆயில் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஃப்ரைட் ஆனியன் - அலங்கரிக்க.

செய்முறை:-
முழுக் கோதுமை என்றால் முதல் நாள் இரவு ஊறப் போட்டு எடுத்து செய்யலாம்.உடைத்த கோதுமை என்றால் 4 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வைக்கவும்.
 சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்து வைக்கவும்.உங்கள் விருப்பப்படி முழு கோழியோ அல்லது கோழியில் பிடித்த பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.நான் முழுக்கால் 3 எண்ணம் எடுத்துள்ளேன்.
 இங்கு ஸ்லோ குக்கரில் செய்து காட்டியிருக்கிறேன்.
ஸ்லோகுக்கரை 10 நிமிடம் நேரம் முற்சூடு செய்யவும்.

 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சூடு செய்யவும்.
 அதில் கோழி இறைச்சியை போடவும்.சூடு வந்தவுடன் பிரட்டி விடவும்.
 ஊறிய கோதுமையை தட்டி நன்கு மூழ்கும் வரை தண்ணீர் வைக்கவும். சிறிது உப்பு சேர்க்கவும்.
 இஞ்சி பூண்டு,கரம் மசாலா(ஏலம் பட்டை கிராம்பு தூள் - சிறிது போட்டால் போதும்..போடாமல் தான் இங்கு செய்வார்கள்)

 மூடி 2 - 3  மணி நேரம் ஹையில் வைத்து   மூடி வைக்கவும்.
 சிக்கன் துண்டுகளும் கோதுமை நன்கு வெந்து வரும்.


video

 நன்கு வெந்தவுடன் நாம் போட்ட பச்சை மிளகாய் ,சிக்கன் வெந்தவுடன் உதிர்த்து அதில் உள்ள எழும்பை எடுத்து விடவும் .போன்லெஸ் சிக்கனாக சேர்த்தால் இலகுவாக இருக்கும்.

 பின்பு நன்கு ஒரு சேர அடிக்க வேண்டும்.பசை போல் ஆக வேண்டும். கஞ்சி மாதிரி வரும்.சிக்கனும் கோதுமையும் நன்கு ஒன்று சேர்ந்து விடும்.
 2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.
video
இப்படி நன்கு ஒரு சேர அடிக்க வேண்டும்.

மீண்டும் நன்கு அடிக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
video


தயார் ஆனதை ஹாட் பாக்ஸிலோ பவுலிலோ எடுத்து வைக்கவும்  மேலே ஆலிவ் எண்ணெய் 2 டேபிஸ்பூன் ஊற்றி வைக்கவும்.பரிமாறும்  பொழுது அலங்கரிக்க வெங்காயம் சிவற பொரித்து வைக்கவும்.
சுவையான சிக்கன் ஹரீஸ் (ஸ்லோ குக்கர் முறை) தயார். செமையாக இருக்கும்.
ஒரு பவுலில் எடுத்து ஃப்ரைட் ஆனியன் அலங்கரித்துப் பரிமாறவும்.

நோன்பு நேரத்தில் நாம் கஞ்சி சாப்பிடுவது போல் அரபு நாட்டில் இந்த ஹரீஸ் பிரசித்தம்.மட்டனில் செய்தால் ருசி இன்னும் பிரமாதமாக இருக்கும்.நான் இங்கு சிக்கனில் செய்து காட்டியிருக்கிறேன்.
மைல்டாகத்தான் இருக்கும் , கார சாரமாக சாப்பிட விரும்புபவகளுக்கு இது அவ்வளவாக பிடிக்காது. இதை முறையில் ஹலீம் மசாலா போட்டும் செய்து பார்க்கலாம்.
(நீங்கள் ப்ரஸர் குக்கரிலும் செய்யலாம், முதல் விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து வைத்து நன்கு மசியும் வரை குறைந்தது முக்கால் மணி - 1 நேரம் வேக வைக்கலாம்)


No comments: