Tuesday, June 27, 2017

பஸ்பூஸா / Basbousa

 தேவையான பொருட்கள்;-
ரவை - 2 கப்
சீனி - அரை கப்
பேக்கிங் பவுடர் அல்லது சோடா - 1 டீஸ்பூன்
புளிக்காத  கெட்டித் தயிர் - 1 கப்
டெசிகேட்டட் கோகனட் - 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
நெய் - அரை கப்
ஊற வைத்த தோல் உறித்த பாதாம் - 20 எண்ணம் (தேவைக்கு)
பின்ச் - உப்பு.

சீனிப் பாகு காய்ச்ச :-
சீனி - 1 கப் (இனிப்பு அவரவர் விருப்பம்)
தண்ணீர் - முக்கால் கப்
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் -  1 டீஸ்பூன் அல்லது வெனிலா எசன்ஸ்.

செய்முறை:-
ரவை,சீனி,தேங்காய்த்துருவல் (டெசிகேட்டட் கோகொனட்) பேக்கிங் சோடா கலந்து வைக்கவும்.
தயிர், நெய் சேர்த்து நன்கு கையால் கலந்து வைக்கவும்.

அரைமணி நேரம் ஊறட்டும்
பின்பு ஒரு சதுர அல்லது வட்ட வடிவ பேக்கிங் ட்ரேயில் பஸ்பூஸா மிக்ஸை பரத்தி வைக்கவும்.
துண்டு போட்டு எடுக்குமாறு கத்தியால் கோடு போட்டு அதன் மேல் ஊறிய தோல் நீக்கிய பாதாம்  பருப்பு வைக்கவும்.
ஓவனை முற்சூடு செய்யவும்.
ஓவனில் 250 டிகிரி வெப்பத்தில் 20-30 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இதற்கிடையில் ஒரு கப் சீனி முக்கால் கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். சீனி கரைந்து கொதித்தால் போதும்.லைம் ஜூஸ் விடவும்.விரும்பினால் பிடித்த எசன்ஸ்  சேர்க்கவும்.
தயார் ஆன சீனிப்பாகை பேக் செய்த பஸ்பூஸா மீது விடவும்.அப்படியே ஈர்த்துக் கொள்ளும்.
மேலே பொன்னிறம் கிடைக்க திரும்ப ஓவனில் ப்லேம் மேல் பக்கம் மட்டும் செட் செய்து 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.

சுவையான பஸ்பூஸா ரெடி. நீங்களும் செய்து பார்க்கவும்.

Monday, June 26, 2017

பருப்பு வடை / ஆம வடை / மசால் வடை / Masal vadai / Dal vadai


தேவையான பொருட்கள் ;-
கடலை பருப்பு - 1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது
விரும்பினால் சிறிது புதினாவும் சேர்க்கலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பெரிய பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:-
கடலை பருப்பை 4  மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனை சுத்தமாக தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் பர பரவென்று அரைத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டு கடலைபருப்பு முழுதாக தட்டுப்பட வேண்டும்.

அரைத்தவற்றுடன் எண்ணெய் தவிர மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து விரவவும்.உப்பு சரியாக போடவும்.

எண்ணெய் சூடு வந்தவுடன் மிதமான நெருப்பில் பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்கவும்.


சுவையான பருப்பு வடை ரெடி.
இங்கு இஃப்தாருக்கு வடையுடன் காயல் வாடாவும் பரிமாறியிருக்கிறேன்.

Saturday, June 24, 2017

முழுக்கோழி பிரியாணி / Whole Chicken Briyani

சிக்கன் பிரியாணி என்றால் எல்லோருக்குமே விருப்பம். முழுச் சிக்கன் பிரியாணி செய்தால் நிச்சயம் கொண்டாட்டம் தான்.வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று பார்ப்போம்.
 தேவையான பொருட்கள்:-
முழுக்கோழி - 900 கிராம்
பாசுமதி அரிசி -  400 கிராம்
உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் - 1
முட்டை - 2 (வேக வைத்து உரித்து வைக்கவும்)
இது தவிர மற்ற பொருட்கள் செய்முறையுடன் பகிர்ந்துள்ளேன்.
முதலில் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த சிக்கனில் மசாலா தடவி ஊற வைக்க வேண்டும்.
1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், 1  டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா 1 டீஸ்பூன்,கெட்டித் தயிர் - 2டேபிள்ஸ்பூன், 1 டேபிள்ஸ்பூன்  லைம் ஜூஸ்,பட்டர் - 1டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.

 மசாலா தயார் செய்து சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனை ஸ்லோ குக்கரில் வேக வைப்பதாய் இருந்தால் ஊற வைக்க வேண்டாம்.நான் ஸ்லோ குக்கரில் செய்தேன்.ஸ்லோகுக்கரை முற்சூடு செய்யவும். அதில் ஊற வைத்த சிக்கன் வைத்து மீடியம் செட் செய்து  வேக வைக்கவும்.நன்றாக வெந்த பின்பு ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.
பாத்திரம் அல்லது ரைஸ் குக்கர் என்றால் விரைவில் ஆகி விடும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் லேசாக எண்ணெய் விட்டும் சிக்கன் வேக வைத்தும் எடுக்கலாம்.உடன் உருளைக்கிழங்கும் சேர்த்து வேக வைக்கவும்.
 இனி பிரியாணிக்கு உண்டான ப்லைன் பிரியாணி ரைஸ் தயார் செய்ய வேண்டும்.

 தே.பொ:- 
 குறிப்பிட்ட அளவு அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விட்டு, 2 ஏலம், பட்டை,கிராம்பு பொரிய விடவும்.  நறுக்கிய வெங்காயம் - 1 போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து மீண்டும் சிம்மில் வைத்து வதக்கவும்.
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் (விருப்பமானால்)மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
1 பச்சை மிளகாய்,1 பெரிய தக்காளி சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.சிறிது பிரட்டி மூடி போட்டு வதங்க விடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
ஊறிய அரிசி சேர்த்து பிரட்டி ஒன்னரை அளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
இப்பொழுது பிரியாணிக்கு ரைஸ் தயாராகிவிட்டது.
முட்டையை அவித்து தோல் உரித்து வைக்கவும்.
 ஒரு வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். விரும்பினால் நட்ஸ் வகைகள் வறுத்து எடுக்கலாம்.
இப்பொழுது வேக வைத்த சிக்கன், பிரியாணி ரைஸ் தயார்.
 வேக வைத்த சிக்கன் லேசாக மசாலாவுடன் வெந்து  பிரட்டியது போல் இருக்கும். முட்டையை வைக்கவும்.
 பிரியாணி ரைஸ் உள்ளே வைத்து மீதியை மேலே அப்படியே பரத்தி, ஒரு டீஸ்பூன் நெய் மேலே விட்டு, 15 நிமிடம் சிம்மில் தம் செய்யவும்.
தம் ஆகி திறந்தவுடன் வறுத்த வெங்காயம் நட்ஸ் மேலே தூவி அலங்கரிக்கவும்.

ஒரு தட்டில் பக்குவமாக எடுத்து வைத்துப் பரிமாறவும்.
சுவையான முழுக் கோழி பிரியாணி தயார். ரைத்தா, ஸ்வீட் உடன் பரிமாறவும்.சிக்கன் மசாலாவுடன் இருப்பதால் ரைஸ் காரமில்லாமல் இருந்தால் கூட சூப்பராக இருக்கும்.
மசாலா உங்க விருப்பப் படியும் சேர்த்து செய்யலாம்.
சூப்பராக இருக்கும் செய்து பாருங்க.
அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Sunday, June 18, 2017

ஹைதராபாத் சிக்கன் ஹலீம் (ஸ்லோ குக்கர் முறை) / Hyderabad chicken haleem (Slow cooker method)

தேவையான  பொருட்கள்;-
முழுக் கோதுமை - 200 கிராம்
பார்லி - 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
மசூர் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
போன்லெஸ் சிக்கன் -500  கிராம்
ஷாஹி ஹலீம் மசாலா - 3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் & நெய் - தலா அரை கப் (175 மில்லி)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
முந்திரி பருப்பு - 15 எண்ணம்
இஞ்சி பொடியாக நறுக்கியது - 1  -2டேபிள்ஸ்பூன்
மல்லி,புதினா நறுக்கியது - சிறிது
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
கோதுமை,பார்லி ,பருப்பு வகைகளை நன்கு அலசி ஊற வைக்கவும்.


 சிக்கன் சுத்தம் செய்து துண்டாக்கி அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
குறிப்பிட்ட எண்ணெய் நெய்யில் வெங்காயம் தாளிக்க 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைத்து விட்டு  மீதி எண்ணெய் நெய் சூடு செய்யவும்.ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்பு  சிக்கன் சேர்த்து வதக்கவும்.



 ஷாகி ஹலீம் மசாலா 3 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்பு ஸ்லோ குக்கர் அல்லது ப்ரஸர் குக்கரில் கோதுமை பருப்பு வகைகளைச் சேர்க்கவும்.ஸ்லோ குக்கர் என்றால் 5 நிமிடம் முற்சூடு செய்து  8 கப் தண்ணீர் சேர்க்கவும்.கோதுமை பருப்பு வகைகளைச் சேர்க்கவும்.வதக்கிய சிக்கன் சேர்க்கவும். குக்கரில்  என்றால் தண்ணீர் கொஞ்சம் அதிகம் சேர்க்க வேண்டும். சிம்மில் வைத்து வேக விடவும்.


 ஸ்லோ குக்கரில் 5-6 மணி நேரம் வேக வைக்கவும்.மீடியம் ஹீட்டில் செட் செய்யவும்.
 மூடி வேக வைக்கவும்.

  நன்கு சாஃப்டாக வெந்து கட்டியாகி வரும்.


ஹேண்ட் ப்லெண்டர் கொண்டு அரையும் குறையுமாக மசிக்கவும். பரபரன்னு இருக்குமாரு மசித்து மீண்டும் தண்ணீர் தேவைப்பட்டால் ஒரிரு கப் சேர்க்கவும்.கொதி வரவும் அடுப்பை ஸ்விட் ஆஃப் சேய்யவும்.


 ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கவும்.அத்துடன் முந்திரியும் சேர்த்து லேசாக சிவற வறுத்து எடுக்கவும்.
குக்கரில் தயாரான ஹலீமை ஒரு செர்விங் பவுல் அல்லது ஹாட் பாக்ஸில் எடுக்கவும்.அதன் மீது தாளித்த வெங்காயம்,முந்திரி,இஞ்சி துருவல் சேர்க்கவும்.
 பொடியாக நறுக்கிய மல்லி புதினா சிறிது தூவவும்.
சூடாகப் பரிமாறவும்.பரிமாறும் பொழுது விரும்பினால் எலுமிச்சை துண்டுகளுடன் பரிமாறலாம்.

Wednesday, June 14, 2017

ப்லைன் இளநீர் கடல்பாசி / Plain Elaneer Kadal paasi


தே.பொ:-
இளநீர் - 2 கப் 
( ஒரு காய் அல்லது 2 காய் இளநீர் அளவைப் பொறுத்து)
(வழுக்கையை எடுத்து சிறிய துண்டாக நறுக்கி வைக்கவும்.)
தண்ணீர் - 2  கப்
அகார் அகார் - 10 கிராம் (அல்லது கையளவு)
சீனி - 2 - 4  டேபிள்ஸ்பூன்( சுவைக்குத் தக்க )

செய்முறை:-
சிறிய துண்டாக நறுக்கி அல்லது மிக்ஸியில் பொடித்து கூட  தண்ணீரில் ஊற வைக்கலாம்
.

பாத்திரத்தில் தண்ணீர்,அகார் அகார் சீனி சேர்த்து கரையும் வரை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
சிறிது எல்லாம் கரைந்து திக்காகி வரும். இதனுடன்  இளநீரைச் சேர்க்கலாம். அல்லது

ஒரு வட்ட தட்டில் இளநீர் வழுக்கையுடன் கூடியதை விட்டு வைக்கவும்.அதனில் காய்ச்சிய அகார் அகார் சேர்க்கவும்.


ஆறியவுடன்  ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் அல்லது வெளியில் வைத்தால் கூட செட் ஆகி விடும்.
நோன்பு திறக்கும் பொழுது இளநீர் கடல்பாசி செய்து பரிமாறலாம்.


கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் சூட்டிற்கு மிகவும் நல்லது. 

அப்படியே துண்டு துண்டாக எடுத்து பவுலில் வைத்தும் பரிமாறலாம்.