Monday, June 26, 2017

பருப்பு வடை / ஆம வடை / மசால் வடை / Masal vadai / Dal vadai


தேவையான பொருட்கள் ;-
கடலை பருப்பு - 1 கப்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது
விரும்பினால் சிறிது புதினாவும் சேர்க்கலாம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பெரிய பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:-
கடலை பருப்பை 4  மணி நேரம் ஊற வைக்கவும்.
அதனை சுத்தமாக தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் பர பரவென்று அரைத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டு கடலைபருப்பு முழுதாக தட்டுப்பட வேண்டும்.

அரைத்தவற்றுடன் எண்ணெய் தவிர மேற்சொன்ன பொருட்கள் சேர்த்து விரவவும்.உப்பு சரியாக போடவும்.

எண்ணெய் சூடு வந்தவுடன் மிதமான நெருப்பில் பொன்னிறமாக வடையை சுட்டு எடுக்கவும்.

video

சுவையான பருப்பு வடை ரெடி.
இங்கு இஃப்தாருக்கு வடையுடன் காயல் வாடாவும் பரிமாறியிருக்கிறேன்.

1 comment:

கோமதி அரசு said...

பருப்பு வடை அருமை.
படங்கள் அழகு.