Tuesday, June 6, 2017

கேரட் கேக் / Carrot cake



தேவையான பொருட்கள்;-

செய்முறை:-
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
முதலில் மைதா,பொடித்த சீனி,பேக்கிங் பவுடர்,பட்டைத்தூள் சேர்த்து அரித்து எடுத்து ஒரு பவுலில் எடுக்கவும்.

இன்னொரு பவுலில் எண்ணெய்,முட்டை,வெனிலா எசன்ஸ்,  கெட்டி மோர் சேர்த்து நன்கு அடிக்கவும்.


அத்துடன் தயாராக இருக்கும் மாவைச் சேர்க்கவும்.அப்படியே மெதுவாக பிரட்டி ஒன்று சேர்க்கவும்.

துருவிய கேரட் சேர்க்கவும்.அப்படியே கலந்து விடவும்.
சிறிது மைதாவில் பிரட்டிய முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்.இப்படி மாவில் பிரட்டி போடுவதால் அடியில் போய் தங்காமல் கேக்கில் ஆங்காங்கு பரவலாக காணப்படும்.

எல்லாம் மிக்ஸ் செய்து கொள்ளவும்.முக்கியமாக ஓவனை 180 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
கேக் செய்யப் போகும் ட்ரேயை பட்டர் பேப்பர் விரித்து எண்ணெய் தடவி வைக்கவும்.அல்லது எண்ணெய் தடவி மாவு தூவியும் வைக்கலாம்.
கேக் செய்ய தயாரான மாவுக் கலவையை  ட்ரேயில் பரவலாக விடவும். முந்திரி கிஸ்மிஸ் இப்பொழுது நேராக ட்ரேயில் மிக்ஸ் செய்ய்லாம்.நான் முன்பே சேர்த்து மிக்ஸ் செய்து விட்டேன்.
180 டிகிரியில் 20-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.ஓவனுக்கு தக்க நேரம் 5-10 நிமிடம் முன்ன பின்ன வரும்.
ஒரு மரக்குச்சியைக் கொண்டு வெந்து விட்டதை உறுதி செய்து விட்டு எடுக்கவும்.மரக் குச்சியில் கேக் மாவு ஒட்டாமல் இருக்க வேண்டும்.
நன்கு ஆறிய பின்பு எடுத்து துண்டு போட்டு பரிமாறவும்.

சுவையான கேரட் கேக் தயார்.

காலை,  மாலை தேனீருடன்  சாப்பிட அருமையாக இருக்கும்.
ரெசிப்பி பகிர்வு:-மிக்க நன்றி. கிச்சன் ஸ்பெல்ஸ். ஆங்கில வலைப்பூ நட்பு திருமதி ரியா சாமுவேல்.

1 comment:

asha bhosle athira said...

ஆஹா மிக அருமை.. ஒருதடவை செய்யோணும்.. இதுவரை கரட்டில் செய்ததில்லை, சாப்பிட்டதுண்டு.. மங்கோவில் செய்திருக்கிறேன்.