Friday, June 2, 2017

கொண்டைக்கடலை சுண்டல் / Channa Sundal

இஃப்தார் சமயம் தினமும் நான் ஒரு சுண்டல் செய்வது வழக்கம்.கொண்டைக்கடலை சுண்டலை சும்மா தாளித்து தேங்காய் போட்டுத்தான் எப்பொழுதும் வைப்பேன். சிறிய மாற்றம் செய்யலாமேன்னு மசாலா சேர்த்து செய்தேன். டேஸ்ட் செமை.
கால் கிலோ அளவிற்கு ரெசிப்பி சொல்கிறேன்.
தேவையான பொருட்கள்:-
வெள்ளைக் கொண்டைக்கடலை - கால் கிலோ
தாளிக்க:-
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய்  வற்றல் - 1
பெரிய வெங்காயம் - 1
பெருங்காயம் - சிறிது.
உப்பு - தேவைக்கு.
 மல்லி கருவேப்பிலை - சிறிது.
அரைத்த  மசாலாவிற்கு -
மிளகாய்வற்றல் -2 அல்லது 3
சோம்பு, சீரகம் - தலா அரை  டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:-
கொண்டைக்கடலையை குறைந்தது எட்டு 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
 குக்கரில் ஊறிய கொண்டைக்கடலை, தேவைக்கு தண்ணீர்  உப்பு போட்டு 4 விசில் வேக வைத்து எடுக்கவும்.ஆவியடங்கிய பின்பு தண்ணீர் வடித்து வைக்கவும்.


தாளிக்க ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு,உளுத்தம் பருப்பு, வற்றல்,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், சிறிது பெருங்காயத்தூள் சேர்க்கவும், அத்துடன் அரைத்த மசால் சேர்க்கவும். லேசாக வதக்கவும்.
வேக வைத்த கொண்டைக்கடலை சேர்க்கவும். உப்பு சரி பார்க்கவும்.
 மல்லி இலை தூவி பிரட்டி விடவும்.
ஒரு பவுலில் எடுத்துப்  பரிமாறவும்.
விரும்பினால் சாப்பிடும் பொழுது தயிர் கலந்தும் சாப்பிடலாம்.


2 comments:

கோமதி அரசு said...

அருமையான சுண்டல்.
தேங்காய், மல்லி, சின்னவெங்காயம், மூன்றையும் பிறு பிறு என்று அரைத்து தாளித்து சாப்பிடுவோம்.
சோம்பு போட்டு செய்தது இல்லை.
செய்து பார்க்கிறேன்.

Asiya Omar said...

கோமதி அக்கா உங்கள் டிப்ஸ்கு நன்றி.நானும் செய்து பார்க்கிறேன்.