Saturday, June 24, 2017

முழுக்கோழி பிரியாணி / Whole Chicken Briyani

சிக்கன் பிரியாணி என்றால் எல்லோருக்குமே விருப்பம். முழுச் சிக்கன் பிரியாணி செய்தால் நிச்சயம் கொண்டாட்டம் தான்.வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று பார்ப்போம்.
 தேவையான பொருட்கள்:-
முழுக்கோழி - 900 கிராம்
பாசுமதி அரிசி -  400 கிராம்
உருளைக்கிழங்கு - மீடியம் சைஸ் - 1
முட்டை - 2 (வேக வைத்து உரித்து வைக்கவும்)
இது தவிர மற்ற பொருட்கள் செய்முறையுடன் பகிர்ந்துள்ளேன்.
முதலில் சுத்தம் செய்து அலசி தண்ணீர் வடித்த சிக்கனில் மசாலா தடவி ஊற வைக்க வேண்டும்.
1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், 1  டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா 1 டீஸ்பூன்,கெட்டித் தயிர் - 2டேபிள்ஸ்பூன், 1 டேபிள்ஸ்பூன்  லைம் ஜூஸ்,பட்டர் - 1டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு.

 மசாலா தயார் செய்து சிக்கனில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனை ஸ்லோ குக்கரில் வேக வைப்பதாய் இருந்தால் ஊற வைக்க வேண்டாம்.நான் ஸ்லோ குக்கரில் செய்தேன்.ஸ்லோகுக்கரை முற்சூடு செய்யவும். அதில் ஊற வைத்த சிக்கன் வைத்து மீடியம் செட் செய்து  வேக வைக்கவும்.நன்றாக வெந்த பின்பு ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.
பாத்திரம் அல்லது ரைஸ் குக்கர் என்றால் விரைவில் ஆகி விடும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தில் லேசாக எண்ணெய் விட்டும் சிக்கன் வேக வைத்தும் எடுக்கலாம்.உடன் உருளைக்கிழங்கும் சேர்த்து வேக வைக்கவும்.
 இனி பிரியாணிக்கு உண்டான ப்லைன் பிரியாணி ரைஸ் தயார் செய்ய வேண்டும்.

 தே.பொ:- 
 குறிப்பிட்ட அளவு அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் விட்டு, 2 ஏலம், பட்டை,கிராம்பு பொரிய விடவும்.  நறுக்கிய வெங்காயம் - 1 போட்டு வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து மீண்டும் சிம்மில் வைத்து வதக்கவும்.
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன் (விருப்பமானால்)மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
1 பச்சை மிளகாய்,1 பெரிய தக்காளி சேர்த்து அரைத்துச் சேர்க்கவும். நறுக்கிய மல்லி புதினா சேர்க்கவும்.சிறிது பிரட்டி மூடி போட்டு வதங்க விடவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
ஊறிய அரிசி சேர்த்து பிரட்டி ஒன்னரை அளவு தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் மூடி சிம்மில் வைத்து வேக வைக்கவும்.
இப்பொழுது பிரியாணிக்கு ரைஸ் தயாராகிவிட்டது.
முட்டையை அவித்து தோல் உரித்து வைக்கவும்.
 ஒரு வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். விரும்பினால் நட்ஸ் வகைகள் வறுத்து எடுக்கலாம்.
இப்பொழுது வேக வைத்த சிக்கன், பிரியாணி ரைஸ் தயார்.
 வேக வைத்த சிக்கன் லேசாக மசாலாவுடன் வெந்து  பிரட்டியது போல் இருக்கும். முட்டையை வைக்கவும்.
 பிரியாணி ரைஸ் உள்ளே வைத்து மீதியை மேலே அப்படியே பரத்தி, ஒரு டீஸ்பூன் நெய் மேலே விட்டு, 15 நிமிடம் சிம்மில் தம் செய்யவும்.
தம் ஆகி திறந்தவுடன் வறுத்த வெங்காயம் நட்ஸ் மேலே தூவி அலங்கரிக்கவும்.

ஒரு தட்டில் பக்குவமாக எடுத்து வைத்துப் பரிமாறவும்.
சுவையான முழுக் கோழி பிரியாணி தயார். ரைத்தா, ஸ்வீட் உடன் பரிமாறவும்.சிக்கன் மசாலாவுடன் இருப்பதால் ரைஸ் காரமில்லாமல் இருந்தால் கூட சூப்பராக இருக்கும்.
மசாலா உங்க விருப்பப் படியும் சேர்த்து செய்யலாம்.
சூப்பராக இருக்கும் செய்து பாருங்க.
அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

No comments: