Monday, July 17, 2017

ப்ளூபெர்ரி மஃபின் / Blueberry Muffins

தேவையான பொருட்கள்;-
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
சீனி - 1 கப் ( இனிப்பு குறைவாக வேண்டுமென்றால் முக்கால் கப்பாக எடுத்துக்  கொள்ளலாம்)
முட்டை - 2 
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
வெண்ணெய்- அரை கப்
பால் - அரை கப்
ஃப்ரெஷ் ப்ளூபெர்ரிஸ் - 1 கப்
இந்த அளவு 12 மஃபின் செய்ய போதுமானதாக இருக்கும்.

செய்முறை:-
மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் சேர்த்து அரித்து வைக்கவும்.
ஒரு பவுலில் முட்டை, சீனி,வெண்ணெய் சேர்க்கவும்.

ஒரு பவுலில் முட்டை,வெனிலா எசன்ஸ்,  சீனி,வெண்ணெய் சேர்க்கவும்.
சீனி நன்கு கரையும் வரை நன்கு அடிக்கவும்.
அத்துடன் மாவைச் சேர்க்கவும்.அப்படியே மிக்ஸ் செய்யவும்.கெட்டியாக இருக்கும், பால் சேர்க்கவும்.மிக்ஸ் செய்யவும். மாவு ரொம்ப திக்காவும் இருக்கக் கூடாது, ஊற்றுவது போலும் இருக்கக் கூடாது.ஸ்கூப் கொண்டு எடுத்து வைப்பது போல் இருக்க வேண்டும்.
ப்ளூபெர்ரி சேர்த்து அப்படியே மெதுவாக பிரட்டவும்.

மஃபின் ட்ரேயில் பேப்பர் கப் அல்லது சிலிகான் கப்பில் பட்டர் தடவவும்.
தயார் செய்த மாவை ஸ்கூப் கொண்டு எடுத்து முக்கால் கப் அளவு வைக்கவும்.
எலக்ட்ரிக் ஓவனை 200 டிகிரி செல்சியஸ் முற்சூடு செய்யவும்.
மஃபின் ட்ரேயை உள்ளே வைத்து ஓவனை 20 நிமிடம் செட் செய்யவும்.
நன்கு பொங்கி வரும்.
டூத் பிக் கொண்டு குத்தி ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது. அதனை அப்படியே வெளியே எடுத்து ஆர வைக்கவும். அரை மணி நேரத்தில் ஆறி விடும்.
கப்பில் இருந்து கேக்கை எடுக்கவும்.
ஸ்பாஞ்ச் போன்ற ப்ளூபெர்ரி மஃபின் தயார்.
காலை,மாலை டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க. எல்லாமே ஒரு குத்து மதிப்பாகத்தான் போட்டேன். செமையாக வந்தது.

Saturday, July 15, 2017

சிக்கன் ஊறுகாய் / Chicken pickle / Achari Murgh

சிக்கன் என்பது தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது.எத்தனை வெரைட்டி சிக்கனில் முயற்சி செய்தாலும் ஹிட் தான்.அப்படியொரு அபரிமிதமான டேஸ்ட் சிக்கனுக்கு உண்டு.
அப்படி முயற்சித்தது தான் சிக்கன் ஊறுகாய்.
 தேவையான பொருட்கள்;-
சிக்கன் விரும்பியபடி துண்டு போட்டுக் கொள்ளவும் - 1 கிலோ
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய் விழுது -4  டேபிள்ஸ்பூன் (ஒரு முழு பூண்டு,அதே அளவு இஞ்சி, 4 பச்சை மிளகாய் (காரம் அவரவர் விருப்பம்))
தயிர் - அரை கப்
எலுமிச்சை ஜூஸ் - 2  டேபிள்ஸ்பூன்
வெங்காயம் -ஒரு பெரிய வெங்காயம்
தக்காளி - ஒரு பெரிய தக்காளி (நான் செர்ரி தக்காளி 100 கிராம்  வீட்டு தொட்டியில் விளைந்தது சேர்த்து செய்தேன்)
எண்ணெய் - 100 அல்லது 150 மில்லி சேர்க்கலாம்.
இனி ஊறுகாய் மசாலாவிற்கு :-
கடுகு,வெந்தயம்,வெங்காய விதை இருந்தால்( நைஜெல்லா சீட்) - தலா அரைடீஸ்பூன்,
மல்லி விதை - 1டீஸ்பூன்
சீரகம்,சோம்பு - தலா அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2-4(காரம் அவரவர் விருப்பம்)
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
சிக்கனை கட் செய்து  விரும்பிய படி துண்டு போட்டுக் கொள்ளவும். நான்கு முறை சுத்தமாகும் வரை அலசி இறுதியாக மஞ்சள் தூள் போல் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
போன்லெஸ் சிக்கனிலும் செய்யலாம்.


 மேற் சொன்னபடி இஞ்சி,பூண்டு,  பச்சை மிளகாய் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
 சிக்கனுடன் வெங்காயம்,தக்காளி,தயிர்,இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது,சுவைக்கு உப்பு கலந்து ஊற வைக்கவும்.
 அத்துடன் ஊறுகாய்க்கு பொடித்த மசாலா எண்ணெய் சேர்த்து விரவி வைக்கவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் விரவிய சிக்கனை போட்டு மூடி வேக வைக்கவும்.
 நான் ஸ்லோ குக்கரில் வேக வைத்து எடுத்தேன்.

 சூப்பராகத் தயார் ஆனது.எலுமிச்சை ஜூஸ் சுவைக்கு தக்க சேர்க்கவும்.
 (சும்மா டேஸ்டிற்கு ஒரு உருளை கட் செய்து வேக வைத்து சேர்த்தும் பார்த்தேன்.) சேர்க்க தேவையில்லை.விரும்பினால் சேருங்க.
செமையாக இருந்தது. ரைஸ் அல்லது சப்பாத்தி, எந்த தானிய வகை ரொட்டியிடனும் பரிமாறலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்தும் எடுத்துச் சாப்பிடலாம்.

Monday, July 10, 2017

அன்னாசி ஆரஞ்ச் ஸ்மூத்தி / Pineapple Orange Smoothie

 
தேவையான பொருட்கள்;-
வேக வைத்த ஓட்ஸ் - அரை கப்
அன்னாசி துண்டுகள் - 1கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 1 கப்
தேன் - சுவைக்கு
பட்டை தூள் - பின்ச்.
 செய்முறை:-


 தேன் தவிர அனைத்தையும் சேர்த்து ப்லெண்ட் செய்து கொள்ளவும்.
 தேன் சேர்த்து கலந்து ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் பரிமாறவும்.

 காலை உணவிற்கு பதில் சாப்பிடலாம்.
ஓட்ஸ் பதில் வாழைப்பழம் சேர்க்கலாம். தேன் , பட்டைத்தூள் சேர்ப்பது அவரவர் விருப்பம்.
அன்னாசி,வாழை,ஆரஞ்சு மட்டும் பாலுடன் சேர்த்தும் செய்யலாம்.