Monday, October 16, 2017

மட்டன் கூட்டு கறி/ Mutton kuutu curry.( மொத்த சமையல்)

 இது அதிகமாகச் செய்த பொழுது கிளிக்கியது.அரைக்கிலோவிற்கு நான் செய்முறை சொல்கிறேன்.

தேவையான பொருட்கள்:-
மட்டன் அல்லது பீப் - அரைக்கிலோ
வீட்டு மசாலா - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1-2 டீஸ்பூன்
ஏலம் பட்டை கிராம்புத்தூள் - கால் டீஸ்பூன்
வெங்காயம்& தக்காளி - தலா 100 கிராம்
பச்சை மிளகாய் -2
மல்லிஇலை - சிறிது
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவைக்கு.
விரும்பினால் ஒரு சில்லு தேங்காய்,கசகசா ஒரு ஸ்பூன் சேர் அரைத்து சேர்க்கலாம்.
செய்முறை:-

கறியை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

தேவையான பொருட்களை தயார் செய்யவும்.
கறியுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,மசாலாத்தூள், மிளகாய்த்தூள்,கரம் மசாலா,வெங்காயம்,தக்காளி,மிளகாய்,மல்லி இலை,உப்பு சேர்த்து விரவி குக்கரில் 5 விசில் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
வெந்த மட்டனில் தண்ணீர் ஊறி இருக்கும்.
அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வற்ற வைக்கவும்.
வற்றி வரும் பொழுது வெந்த கறியைச் சேர்க்கவும்.இப்படி செய்வதால் கறி உதிராது.
எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டு போல் ஆகுவிடும்.மட்டன் கூட்டு ரெடி.
விரும்பினால் ஒரு சில்லு தேங்காய் ஒரு டீஸ்பூன் கசகசாவுடன் அரைத்து ஊற்றலாம்.காய்கறிச்சோறுக்கு( வெஜ் பிரியாணி) இந்த கூட்டு சூப்பர் காம்பினேஷன்.
சுவையான மட்டன் கூட்டு தயார்.இதனை பக்க உணவாக வெறுஞ்சோறு,தேங்காய்ச்சோறு,நெய் சோறு,பிரியாணி,காய்கறிச்சோறு இவற்றுடன் பரிமாறலாம்.

No comments: