Tuesday, November 21, 2017

அரபிக் ஸ்டைல் மட்டன் பிரியாணி / Arabic style mutton briyani

தேவையான பொருட்கள் :-
மட்டன் பெரிய துண்டுகளாக - 400 கிராம்
பாசுமதி அரிசி - 200 கிராம்
பட்டர் - 20 அல்லது 25 கிராம் கியூப்
பெரிய வெங்காயம் - 1
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் -2 ( விரும்பினால்)
சூப் கியூப் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
காய்ந்த எலுமிச்சை - 1
மசாலா பொடிக்க:
பட்டை சிறிய துண்டு -1
மிளகு - 1 அல்லது அரை  தேக்கரண்டி
முழு மல்லி - 1 தேக்கரண்டி

பரிமாறும் அளவு 2- 3 நபர்கள்.

செய்முறை:-
 மட்டனை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
அரிசியையும் அலசி ஊற வைக்கவும்.

 பொடிக்க வேண்டியதை எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
 ஒரு பேனில் பட்டர் போட்டு உருகவும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நான் ஸ்லோ குக்கரில் செய்யப் போவதால் இப்படி பேனில் முதலில் வதக்கி சேர்க்கிறேன், நீங்கள் பாத்திரம் அல்லது குக்கரில் செய்வதாய் இருந்தால் நேரடியாக அதிலே செய்யலாம்.

 இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

 பொடித்த மசாலா சேர்க்கவும்.


 மட்டன் சேர்த்து பிரட்டவும்.
 தக்காளி விழுது பச்சை மிளகாய் சேர்க்கவும்.

கறி மூழ்கும் அளவு  தண்ணீர் ,விரும்பினால் சூப் கியூப் சேர்க்கவும்.

 ஸ்லோகுக்கரை ஆன் செய்து முற்சூடு செய்யவும்.மீடியம் வெப்ப நிலை செட் செய்யவும். தயாராய் உள்ள கறியை சேர்க்கவும்.காய்ந்த எலுமிச்சையும் அத்துடன் சேர்க்கவும்.மூடவும்.
 சாஃப்டாக வேகும் வரை விடவும். இரண்டு மணி நேரம் கூட ஆகலாம். கறி பஞ்சு மாதிரி வேகும். உடையாது.டேஸ்ட் அதன் இயற்கை சுவையிலேயே இருக்கும்.
ஸ்லோகுக்கரில் வேக வைப்பதால்  கறியில்  உள்ள கொழுப் பெல்லாம் வெளியே கக்கி விடும்.
 அரிசியை வடித்தும் தட்டலாம்.அல்லது ஊறியதையும் தண்ணீர் வடித்து சேர்க்கவும்.கறியில் உள்ள தண்ணீரே போதுமானதாய்  இருக்கும்.
சோறு வெந்ததும் அலுமினியம் ஃபாயில் கொண்டு மூடி ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.
திறந்து பிரட்டி எடுத்து பரிமாறவும்.


 சுவையான அரபிக் ஸ்டைல் பிரியாணி தயார்.  வெள்ளரி,வெங்காயம்,லெட்டூஸ்,  தக்காளி நறுக்கி சாலட் செய்து பரிமாறவும்.
தக்காளி சாஸ் அரபிக் முறையில் செய்ய பெரிய தக்காளி,சிறிய பச்சை மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் மல்லி இலை,பின்ச் சீரகத்தூள்,பெரிய பின்ச் பொடித்த மல்லி உப்பு  சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து சிறிது லூசாக பரிமாறவும்.





2 comments:

கவிப்புயல்:) athira said...

ஆஹா அருமை வாசம் இங்குவரை வருதே...:)

Sumathi M said...

அருமை...
வாழ்த்துக்கள்...