Sunday, November 19, 2017

காடை மிளகு ரோஸ்ட் / Quill pepper roast

தேவையான பொருட்கள் :-
சுத்தம் செய்த காடை - 6 எண்ணம்
காடையை அலச மஞ்சள் தூள் 1டீஸ்பூன்
நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை தேக்கரண்டி (ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
மிளகாய்த்தூள்  - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
லேசாக மணம் வர வறுத்து பொடித்துக் கொள்ள :-
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மேலும் காரம் விரும்பினால் ஃப்ரெஷாக மிளகு பொடித்து தூவவும்.
தாளிக்க மரச்செக்கு நல்லெண்ணெய் - 4 -6   மேஜைக்கரண்டி
சோம்பு,மிளகு தலா - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4
கருவேப்பிலை சிறிது
நறுக்கிய மல்லி இலை சிறிது.

செய்முறை:-

 காடையை தோல் நீக்கி நன்கு அலசிக் கொள்ளவும். ஆங்காங்கு கீறி விட்டுக் கொள்ளவும்.
 கடைசியாக ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் தண்ணீரில் போட்டு சிறிது ஊற விடவும்.
 தண்ணீர் வடித்து வைக்கவும்.
 கடாயில் நல்லெண்ணெய் விடவும். சூடானவுடன் முழு மிளகு,சோம்பு,கருவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
 எல்லாம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
 நன்கு வாடை போக வதக்கவும்.
 தக்காளி சேர்க்கவும்.
 சிறிது உப்பு சேர்த்து வதங்க விடவும்.
 மசாலா வகைகள் சேர்த்து பிரட்டவும்.
 சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

 எல்லாம் கூட்டு போல் ஆனவுடன் காடையச் சேர்க்கவும்.முழுதாகவோ பாதியாக நறுக்கியோ சேர்க்கலாம்.

 பிரட்டி விட்டு, மூடி போட்டு வேக விடவும்.

 வெந்ததும் உப்பு சரி பார்க்கவும். வறுத்து பொடித்ததைச் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி சிறிது தண்ணீர் தெளித்து திரும்ப மூடி சிறிது எல்லாம் சேர்ந்து கொதிக்கட்டும்.

 திறந்து நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டவும்.கால் மணி நேரத்தில் தயார் ஆகிவிடும்.
 காரம் தேவைப்பட்டால் ஃப்ரெஷாக மிளகு பொடித்து மேலே தூவி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
 சுவையான  காடை மிளகு ரோஸ்ட் தயார். செமையாக இருக்கும்.
எலும்பு கூட மெதுவாக இருக்கும்.
பக்க உணவாகப் பரிமாறலாம்.பிடித்திருந்தால் நீங்களும் செய்து பாருங்க.


2 comments:

அப்பாவி athira said...

ஆசியா எப்படி இருக்கிறீங்க?.. பேசிப் பல நாள் ஆச்சு... நலம்தானே... அதிராவை நினைவிருக்குதுதானே:)...

ரோஸ்ட் சூப்பராக இருக்கு, சிக்கினில் செய்து பார்த்திடலாம்.

Asiya Omar said...

அதிரா அதெப்படி மறக்க முடியும். நாமெல்லாம் ஆரம்ப கால நட்பூஸ்.இப்ப எதுவும் பிடிக்காவிட்டாலும் கஷ்டப்பட்டு கட்டிய வலைப்பூ வாடிவிடக்கூடாது என்று அப்ப அப்ப போஸ்டிங்.அன்பும் நன்றியும் வருகைக்கு.