Tuesday, December 19, 2017

ஈசி முதபல் /EASY MUTHABAL

தேவையான பொருட்கள்;-
பெரிய வயலட் கத்திரிக்காய் - 1 ( 400 -500 கிராம்)
தகினா பேஸ்ட் (எள்ளு)- 2 மேஜைக்கரண்டி
கெட்டி தயிர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு -சுவைக்கு
விரும்பினால் எலுமிச்சைச் சாறு - சில துளிகள்.

செய்முறை:-
கத்திரிக்காயை சுட்டுத்தான் செய்ய வேண்டும்.
இந்த முறை ஏர் ஃப்ரையரில் சுட்டு பார்த்தேன்.முற்சூடு செய்யவும். 10 நிமிடம் 200 டிகிரி வெப்பநிலையில் ஒவ்வொரு பக்கமும் வைத்து எடுக்கவும். சுடுவது சுலபம்.ஆனால் மெதுவாக இல்லை.
தோல் உரிக்க இலகுவாக இருந்தது.
பொதுவாக கேஸ் அடுப்பில் அல்லது ஓவனில் சுட்டால் ஸ்பூனால் அல்லது கையால் கூட மசித்து விடலாம்.
கத்தி கொண்டு பொடியாக நறுக்கினேன். மசுமையாக இல்லாததால்
ப்லெண்டரில் மசித்து எடுத்தேன்.

அத்துடன்,தயிர்,தகினா பேஸ்ட் சேர்த்து கலந்து சில துளிகள் எலுமிச்சை சாறு,சுவைக்கு சிறிது உப்பு சேர்த்து ஆலிவ் ஆயிலும் சேர்த்து கலந்தால் தயார்.
சுவையான  முதபல் தயார்.
குபூஸ் கிரில் சிக்கனுடன் பரிமாறவும்.

3 comments:

Sangeetha Nambi said...

New dish to me ! Bookmarking it !
http://recipe-excavator.blogspot.com

கம்பபாரதி athira said...

பெயர் பார்த்துப் பயந்திட்டேன்... இதே முறைதான் ஆனால் பால் வெங்காயம் ப மிழகாய் சேர்த்து குழைப்போம்.

பரிவை சே.குமார் said...

கோஸ்மல்லிக்கு கத்திரிக்காயை சுட்டுத் தயார் செய்வார்கள்... இட்லிக்கு சூப்பரா இருக்கும்.
அம்மா அடிக்கடி செய்வார்.

இது வித்தியாசமான... கேள்விப்படாத பேரா இருக்கு.
ஆனாலும் சுலபமாச் செய்யலாம் என்பதால் முயற்சித்துப் பார்க்க வேண்டும் அக்கா.