Sunday, December 17, 2017

புதினா சட்னி / Mint chutney

இந்த முறையில் செய்து பாருங்க,ரொம்பச் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்;-
புதினா இலைகள் - ஒரு சிறிய கட்டு
ஒரு பெரிய வெங்காயம்
பூண்டு - சிறிய 10 பற்கள்
பச்சை மிளகாய் - 4
பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி
புளி சிறிது
எண்ணெய் வதக்க - 2 தேக்கரண்டி.
உப்பு தேவைக்கு.
செய்முறை:-
புதினாவை ஆய்ந்து சுத்தம் செய்து அலசி வைக்கவும்.
 வாணலியில் எண்ணெய் சூடு செய்து தேவையான பொருட்கள் அணைத்தும் சேர்த்து வதக்கவும்.
 ஆற வைக்கவும்.

 மிக்சி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
சுவையான புதினா சட்னி தயார். இட்லி, தோசை,புலாவுடன் பரிமாறலாம்.

3 comments:

வெங்கட் நாகராஜ் said...

பொட்டுக்கடலை சேர்த்து செய்ததில்லை. செய்து பார்க்க வேண்டும். நன்றி.

கம்பபாரதி athira said...

நானும் இப்படியும் செய்வேன் ஆசியா.. ஆனா பொட்டுக்கடலை சேர்க்காமல் செய்யும்பொது கொஞ்சம் சுவை அதிகம்.
புளிக்குப் பதில் தேசிக்காயும் மாறிச் சேர்ப்பேன்.

Asiya Omar said...

அன்பான வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. இங்கே தேங்காய்க்கு பதில் பொட்டுக்கடலை சேர்த்துப் பார்த்தேன் ..நிச்சயம் பிடிக்கும் செய்து பாருங்க.மகளே பாராட்டிவிட்டாள் நா பார்த்துக்கோங்க.