Friday, February 24, 2017

ஆட்டுக்கால் பாயா / Aatukaal Paya

தேவையான பொருட்கள்:-
ஆட்டுக்கால் - 2 செட் ( 8 எண்ணம்)
பெரிய வெங்காயம்  -2
பெரிய தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா,கருவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - ஏலம் பட்டை கிராம்புத்தூள் -  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் ( விரும்பினால்)
நல்ல எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:-
மிளகு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 டீஸ்பூன்,மல்லித்தூள் - 1  டேபிள்ஸ்பூன்,  தேங்காய் 4 டேபிள்ஸ்பூன், முந்திரி -6 - 8. காரம் வேண்டுமானால் மிளகை கூட்டிக் கொள்ளலாம். இதுவே சரியாக இருக்கும், (விரும்பினால் லேசாக வெதுப்பி எடுத்து அரைத்துக் கொள்ளலாம்)

செய்முறை:-
ஆட்டுக்காலை முதலில் வேக வைக்க வேண்டும். நீங்க தேவைக்கு தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரிலோ அல்லது ஸ்லோ குக்கரிலோ வேக வைத்துக் கொள்ளலாம். ப்ரஸர் குக்கரில் என்றால் ஒரு முக்கால் மணி நேரம் அடுப்பைக் குறைத்து வேக வைத்து எடுக்கவும்.
நான் ஸ்லோ குக்கரில் வெந்து எடுத்தேன். இந்த ஸ்லோ குக்கரில் வைத்து வேகும் பொழுது தண்ணீர் பொங்கி வடிவதோ, குறையவோ செய்யாது . நாம் வைத்த அந்த தன்ணீரும் அப்படியே இருக்கும். நல்ல சாஃப்டாக வெந்து அதன் உருவும் மாறாமல் அப்படியே இருக்கும். மணமும் சுவையும் செமையாக இருக்கும்.
நீங்க முழுவதும் கூட இதிலே செய்யலாம். மேலே தாளித்து மட்டும் கொட்டினால் கூட போதும். என்னோட குக்கர் அளவு 3 லிட்டர் தான்.
சூப் எனக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும் என்பதால் நான் வேக வைத்து  எடுத்து  பாத்திரத்தில் தனியாக பாயாவை செய்து கொண்டேன்.
முதலில் ஸ்லோகுக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு சுத்தம் செய்து துண்டாக்கிய ஆட்டுக்காலைப் போடவும்.
தேவைக்கு ஆட்டுக்கால் மூழ்கும் அளவு தண்ணீர் வைக்கவும். மூடி வேக விடவும். ஹையில் வைக்கலாம். இளம் கால் என்பதால் இரண்டு மணி நேரத்தில் பஞ்சாக வெந்து விட்டது.
அரைக்க சொன்னவற்றைச் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஆட்டுக்கால வேகட்டும்.விரும்பினால் வெந்த பின்பு இதில் கூட அரைவையைச் சேர்க்கலாம்.
2-3 மணி நேரத்தில் கால் வெந்து விடும். நாம் முன்பே நேரம் கிடைக்கும் பொழுது வெந்து வைத்துக் கொள்ளலாம்.
video

வெந்து விட்டதை உறுதி செய்த பின்பு ஸ்விட்ச் ஆஃப் செய்யவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் நன்கு  வதக்கவும், இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது சிம்மில் வைத்து மூடி திறக்கவும். சிறிது நறுக்கிய மல்லி,கருவேப்பிலை, புதினா சேர்க்கவும்.( சும்மா கொஞ்சம் தான் சேர்க்க வேண்டும். ஒரு பெரிய தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து விடவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும். விரும்பினால் மிளகாய்த்தூள் சேர்க்கலாம். நன்கு தக்காளி வதங்கி கூட்டு போல் ஆக வேண்டும்.

பின்பு குக்கரில் வேக வைத்த ஆட்டுக்காலை சேர்க்கவும். உப்பு தேவைக்கு போடவும். அரைத்த தேங்காய் மிளகு மசாலாவைச் சேர்க்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து தேங்காய் வாடை மடங்க வேண்டும்.

video
கொதித்து பாயா தயார் ஆனவுடன் அடுப்பை அணைக்கவும்.
மேலே சிறிது நறுக்கிய மல்லி இலை தூவலாம். மூடி வைக்கவும்.
ஆட்டுக்கால் பாயாவை, பரோட்டா, மெத்து தோசை, இடியாப்பம், ஆப்பத்துடன் பரிமாறலாம்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி மசாலா, இது ஒரு முறை.உங்கள் விருப்பம் தான் வீட்டு மசாலா, ஊர் மசாலா போட்டும் செய்யலாம்.
செமையாக இருக்கும் .

Wednesday, February 22, 2017

ஏர் ஃப்ரைட் ஸ்பைசி சிக்கன் விங்ஸ் / Air fried spicy chicken wings

தேவையான பொருட்கள்;-
சிக்கன் விங்ஸ் - அரைக் கிலோ (7-  8 எண்ணம்)
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
பூண்டு  பல் - நைசாக தட்டியது - 4
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
ஒரிகானோ - 1 டீஸ்பூன்
பெப்பர் பவுடர் - 1டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-



சிக்கன் விங்ஸ் நன்கு  சுத்தம் செய்து அலசி மஞ்சள் தூள் போட்டு பிரட்டி மீண்டும் அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

மேற் சொன்ன பொருட்கள் யாவும் சேர்த்து கலந்து  ஒரு மணி நேரமாவது வைக்கவும்.
ஏர் ஃப்ரையரை ஒரிரு நிமிடம் முற்சூடு செய்யவும். ஊறிய சிக்கன் விங்ஸ் ட்ரேயில் அடுக்கவும்.
பின்பு 10 நிமிடம் 220 டிகிரி யில் ஏர் ஃப்ரை செய்து எடுக்கவும்.முதலில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்து பின்பு திருப்பி வைத்து ஃப்ரை செய்து எடுக்கவும்.
சூடாகப் பரிமாறவும்.
எலக்ட்ரிக் ஓவனிலும் பேக் செய்து எடுத்தாலும் செமையாக இருக்கும்.

Monday, February 20, 2017

பார்லி மட்டன்/ பீஃப் வெஜ் சூப் / Barley /Mutton / Beef vegetable soup

 பாத்திரங்கள் உபகரணங்கள் பகுதிக்கு பதிவு போட்டு நாளாகுது. இந்த வருடம் புத்தாண்டுக்கு கிடைத்த அன்புப் பரிசு ஸ்லோ குக்கர்.
இந்த ஸ்லோ குக்கரில் பிரியாணி முதல் டெசர்ட் வரை முயற்சி செய்து பார்த்திட்டேன். எங்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கு.
பாத்திரம்  வாங்கினாலும் போஸ்டிங் போட சோம்பல்.சரி ரெசிப்பி பகிர்வோடு பாத்திரப்  பகிர்வும் போட்டாச்சு.
தேவையான பொருட்கள்;-
மட்டன் அல்லது பீஃப் - 400 கிராம்
( மட்டனில் ஊற வைக்க தயிர் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு 2டீஸ்பூன், வீட்டு மசாலா - 1 டேபிள்ஸ்பூன்,விரும்பினால் கரம் மசாலா - கால் டீஸ்பூன்,  உப்பு தேவைக்கு)
விருப்பமான காய்கறிகள்  கால் கிலோ
( வெங்காயம், தக்காளி, காலிப்ளவர், கொடைமிளகாய், கேரட்)
பார்லி - அரை கப்.
செய்முறை:-
முதலில் ஸ்லோ குக்கரை ஆன் செய்து ஸ்லோவில் வைத்து 10 நிமிடம்  ஓவனைப் போல முற்சூடு செய்ய வேண்டும். பின்பு ஒரு கப் கொதி நீரை விடவும்.


 பின்பு சேர்க்க வேண்டிய பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். பார்லியை தண்ணீரில் அலசி எடுத்து வைக்கவும்.
 பார்லியை ஊற வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஏனெனில் நாம் 4 -5 மணி நேரம் மெதுவாக வேக வைக்கப் போகிறோம்.
 முதலில்  கொதிக்கும் நீர், அடுத்து பார்லி சேர்த்து, மசாலாவில் பிரட்டிய மட்டனைச் சேர்க்கவும்.
 பின்பு விருப்பமான காய்கறிகள் சேர்க்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்.
 மூடி மீடியம் அல்லது ஹையில் செட் செய்து விடவும்.
 இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறை வந்து பார்த்து மிக்ஸ் செய்து விடவும்.
அதன் பின்பு மீண்டும் 2 அல்லது 3 மணி நேரம் கழித்து வந்து ஸ்விட்ச் ஆஃப் செய்து விடவும்.
   
பரிமாறும் வரை  சூடு மோடில் வேண்டுமானாலும் வைக்கலாம்.
சுவையாக தயார் ஆன பார்லி மட்டன் வெஜ் சூப்பை வெது வெதுப்பாக பரிமாறவும்.இரவு நேரம் செய்து பரிமாறலாம். அல்லது விருந்தில் ஒரு மெனுவாகவும் வைக்கலாம்.

Saturday, February 18, 2017

காளிப்ளவர் ஸ்டூ / Cauliflower stew

தேவையான பொருட்கள்;-
காளிப்ளவர் - கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலம் 1,பட்டை 1 சிறிய துண்டு,கிராம்பு  1
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பொடியாக நருக்கியது 1 டீஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1இணுக்கு
நறுக்கிய வெங்காயம் - 2
 தேங்காய்ப்பால்- 2 கப்
விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் - 1 டேபிள்ஸ்பூன்
பொடித்த மிளகு - சிறிது
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-

காளிப்ளவரை சிறிய துண்டுகளாக்கி கொதி நீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விடவும்.ஏலம், பட்டை கிராம்பு ,கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அதனில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் காளிப்ளவர், சிறிது உப்பு  சேர்த்து வதக்கவும்.ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.
 காளிப்ளவர் நன்கு வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்க்கவும். விரும்பினால் ஃப்ரெஷ் கிரீம் சிறிது சேர்க்கலாம். நல்ல ரிச்சாக இருக்கும்.
 பச்சை மிளகாய் காரம் போதவில்லை என்றால் மிளகும் பொடித்து சேர்த்துக் கொள்ளலாம்.சிம்மில் வைக்கவும். நுரை கூடி வரவும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான காளிப்ளவர் ஸ்டூ தயார்.
இதனை சூப் போலும் குடிக்கலாம்,ஆப்பம் இடியாப்பத்துடனும் பரிமாறலாம்.
காளிப்ளவருடன் விரும்பினால் உருளைக்கிழங்கோ சிக்கனோ சேர்த்தும் ஸ்டூ  செய்யலாம்,

Thursday, February 16, 2017

நெத்திலி மீன் மாங்காய் தொக்கு

 தேவையான பொருட்கள்;-
சுத்தம் செய்த நெத்திலி மீன் கால் கிலோ
நெத்திலி மீன் எப்படி சுத்தம் செய்வது என்பதை பார்க்க கிளிக்கவும்.
( மீனில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காய்ம் - 2
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
 வீட்டு  மசாலா - 2 டீஸ்பூன்
விரும்பினால் தேங்காய்ப்பால் - சிறிது
மாங்காய் மெல்லிசாக சீவியது - நான்கு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை -சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-

 ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
 பின்பு தக்காளி சேர்க்கவும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
 வதங்கி வரும் பொழுது மீன் மசாலா சேர்க்கவும்.பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகுமாறு கொதிக்க விடவும்.

 பின்பு நெத்திலி மீனைச் சேர்க்கவும்.
 5 நிமிடம் வேக விடவும்.
 விரும்பினால் தேங்காய்ப்பால் சேர்க்கவும்.

 மாங்காய் சீவியதை சேர்க்கவும். பிரட்டி விட்டு மூடி போட்டு வேக விடவும்.

 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.சிம்மில் வைக்கவும்.
எண்ணெய் மேலே வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான நெத்திலி மீன் மாங்காய் தொக்கு தயார்.
சூடான சாதம், சாம்பார் அல்லது கெட்டி பருப்பு, ரசம்,அப்பளத்துடன் பரிமாறவும்.