Monday, January 22, 2018

ஆட்டுக்கால் சால்னா / Aatukaal salna

 தேவையான பொருட்கள் ;-
ரெடியாக வாங்கி கட் செய்த ஆட்டுக்கால் 2 ஜோடி (8 எண்ணம்)
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

வீட்டு கறி மசாலாத்தூள் - 2 மேஜைக்கரண்டி குவியலாக
( அல்லது மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி,சீரகத்தூள் ,மிளகாய்த்தூள்- தலா 1 தேக்கரண்டி,மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி)

கரம் மசாலா -1/4-  1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:-எண்ணெய் - 1-2 மேஜைக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1
கருவேப்பிலை - 2இணுக்கு
நறுக்கிய மல்லி இலை - சிறிது
அரைக்க:
கால் கப் தேங்காய்த்துருவல் ,முந்திரி பருப்பு - 4 ( அதிகம் தேங்காய் விரும்பினாலும் சேர்க்கலாம்)
செய்முறை:-
முதலில் சுத்தம் செய்து சுட்டு வாங்கிய ஆட்டுக்கால் துண்டுகளை நன்கு அலசி எடுக்கவும். கரியோடு இருந்தால் சிறிது மைதா சேர்த்து விரவி சிறிது ஊறவிட்டு அலசி எடுக்கவும்.
குக்கரில் சுத்தம் செய்து கழுவி எடுத்த ஆட்டுக்கால்,இஞ்சி பூண்டு விழுது,மசாலாத்தூள்,தயிர்,மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
முதல் விசில் வரவும் அடுப்பைக் குறைத்து சிம்மில் அரை மணி நேரம் வைக்கவும் .
ஆவி அடங்கியவுடன் திறந்து உப்பு சேர்க்கவும்.கரம் மசாலா,மிளகுத்தூள் சேர்க்கவும். தேங்காய் அரைத்தது சேர்க்கவும்.
சிம்மில் இருந்து கொதிக்கட்டும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கி,கருவேப்பிலை சேர்த்து  தாளித்துக் கொட்டவும்.
கலந்து விட்டு விரும்பிய உணவுடன் பக்க உணவாகப் பரிமாறவும். தோசை, பரோட்டா, சூடான சோற்றுடன் பரிமாறலாம்.



1 comment:

பரிவை சே.குமார் said...

செய்து பார்க்கலாம்.
அருமையான செய்முறை அக்கா...