Monday, January 22, 2018

சிக்கன் பருப்பு /சிக்கன் தால்ச்சா / Chicken dal

எலும்புடன் கூடிய சிக்கனை பருப்பு சேர்த்து செய்து அசத்தியது. நெய் சோறு,புலாவ்,பிரியாணி ஏன் வெறுஞ்சோறுவுடனும்,இட்லி,தோசை,சாப்பாத்தி எது கூட வேண்டுமானாலும் பரிமாறலாம்.
 தேவையான பொருட்கள் ;-
எலும்பு சிக்கன் - கால் கிலோ
துவரம் பருப்பு - 100 கிராம்
பெரிய வெங்காயம்,பெரிய தக்காளி - தலா -1
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய பூண்டு அல்லது தட்டியது - 1 மேஜைக்கரண்டி
மல்லி,புதினா,கருவேப்பிலை -சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
புளி கரைக்க - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு.
விரும்பினால் சிறிய மாங்காய் ஒன்றும் கடைசியில் சேர்க்கலாம்.
தாளிக்க:-
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கருவேப்பிலை  -2 இணுக்கு
நறுக்கிய சிறிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி.

செய்முறை:-
ஊற வைத்த பருப்பை குக்கரில் சேர்த்து தேவைக்கு தண்ணீர்,புளி, உப்பு தவிர அனைத்து பொருட்களும் சேர்க்கவும்.

 குக்கரை மூடி விசில் போட்டு வேக விடவும்.
 3 விசில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 திறந்து கலந்து விட்டு புளிக்கரைத்து விடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும்.விரும்பினால் சிறிய மாங்காய் ஒன்று நறுக்கி சேர்க்கலாம்.
 ஒன்று சேர்ந்து கொதிக்க விடவும்.உப்பு,புளி சரி பார்க்கவும்.

 ஒரு சிறிய கடாயில் தாளிக்க எண்ணெய் விட்டு மேற்கூறிய தாளிக்கும் பொருட்கள் சேர்த்து சிவற விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பில் கொட்டவும்.நன்கு கலந்து விட்டு ஒரு கொதி விடவும்.
 சுவையான சிக்கன் பருப்பு / தால்ச்சா தயார்.விரும்பிய உணவுடன் பக்க உணவாகப் பரிமாறவும்.

No comments: