Monday, January 22, 2018

தேங்காயிட்ட காய்கறி சாம்பார் / Coconut veg sambar

எங்க ஊர் பக்கம் சாம்பாரில் தேங்காய் அரைத்து சிலர் சேர்ப்பார்கள். அது ஒரு தனி சுவையைத்தரும்.
 தேவையான பொருட்கள்;-
துவரம் பருப்பு - 100-150 கிராம்
காய்கறிகள் கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய்,முருங்கைக்காய் - 1/4 கிலோ ( விரும்பினால் அதிகமாகவும் காய் சேர்க்கலாம்)
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
கீரிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி இலை
புளி ஊற வைக்க எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3-4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
அரைக்க:- தேங்காய் 4 மேஜைக்கரண்டி
தாளிக்க :-
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு,வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
கிள்ளிய வற்றல் - 2
பெருங்காயப் பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2இணுக்கு.
நெய் - 1 தேக்கரண்டி.

செய்முறை:-
குக்கரில் ஊற வைத்த பருப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில்  வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில்  காய்கறிகள் ,வெங்காயம்,தக்காளி,சாம்பார் பொடி,உப்பு சேர்த்து வேக வைக்கவும். காய் வெந்ததும் புளித்தண்ணீர் சேர்க்கவும்.நன்கு கொதிக்க விடவும்.
 பருப்பையும் காய் வெந்ததும் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
  நறுக்கிய மல்லி இலை சேர்க்கலாம்.
 அரைத்த தேங்காய் சேர்க்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 மேற்கூறிய பொருட்கள் சேர்த்து தாளித்து கொட்டவும்.மேலே மணத்திற்கு நெய் சேர்க்கவும்.
 சுவையான தேங்காயிட்ட சாம்பார் தயார்.

No comments: