Thursday, January 25, 2018

ஈசி தக்காளி இறால் ஃப்ரை/ Easy tomato prawn fry

தேவையான பொருட்கள்;-
இறால் 1 கிலோ வாங்கி சுத்தம் செய்தது
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
தக்காளி பெரியது -1
மிளகாய்த்தூள் -2 தேக்கர்ண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
கருவேப்பிலை - 2இணுக்கு.

செய்முறை:-
சுத்தம் செய்த இறாலை அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
அதனில்  இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு கலந்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் சூடானவுடன் கருவேப்பிலை போட்டு ஊற வைத்த இறால் சேர்க்கவும்.நன்கு தண்ணீர் வற்றி வரும் பொழுது நறுக்கிய  தக்காளியை கையால் நன்கு பிணைந்து மேலே சேர்க்கவும்.
தக்காளியும் இறாலுடன் சேர்த்து வரும்.உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.

 இப்படியே கொஞ்சம் ஒட்டியது போல் அடுப்பை அணைத்தும் பரிமாறலாம்.
பொரித்தது போல் வேண்டுமானால் சிறிது வாட்டி அடுப்பை அணைக்கவும்.
விரும்பிய உணவுடன் பக்க உணவாகப் பரிமாறவும்.




No comments: