Saturday, January 20, 2018

மாசி பொரிச்சது / Maasi porichathu

 தேவையான பொருட்கள்;-
மாசி - 25 கிராம்
எண்ணெய்  - 4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 100 கிராம்
நாட்டுத்தக்காளி - 100 கிராம்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி,கருவேப்பிலை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2- 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-
 எல்லாப் பொருட்களும் நறுக்கி தயார் செய்யவும்.

மாசியை சிறிய துண்டாக தட்டி மிக்ஸி ஜாரில் போட்டு பொடிக்கவும்.

  
வெங்காயம் மல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

 தக்காளி சேர்த்து கூட்டு போல் வதக்கவும்.
 தக்காளி மிளகாய்த்தூள் சேர்க்கவும்.



 பொடித்த  மாசி ,தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டவும்.
 உப்பு சரி பார்க்கவும்.
சுவையான  மாசி பொரிச்சது தயார். சூடான சோறு ரசம், இடியப்பம், ஆப்பம்,ரொட்டியுடன் கூட பரிமாறலாம்.

No comments: