Saturday, January 20, 2018

மாசிச் சம்பல் / Maasi sambal


தேவையான பொருட்கள்;-
மாசி - 25 கிராம் +மிளகாய் வற்றல் 2 + உப்பு சிறிது சேர்த்து பொடிக்கவும்.
பெரிய வெங்காயம் நறுக்கியது  அல்லது சின்ன வெங்காயம் 50 கிராம்-
அரை கப் தேங்காய்த்துருவியது
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 1
மல்லி,கருவேப்பிலை இலை சிறிது.
எலுமிச்சை ஜூஸ் - சில துளிகள் (விரும்பினால்)

செய்முறை :-
 மாசி பொடித்தது, தேங்காய்த்துருவல்,நறுக்கிய சின்ன வெங்காயம்,மல்லி கருவேப்பிலை நறுக்கியது தயார்.
 இனி எல்லாம் சேர்த்து விரவி விரும்பினால் எலுமிச்சை பிழியவும்.
 சுவையான மாசிச் சம்பல் தயார். எங்க ஊர் எளிய செய்முறை இது தான்.
நெல்மாவு ரொட்டி அல்லது சூடான சோறு,
கெட்டி பருப்பு,ரசத்துடன் பரிமாறலாம்.

No comments: