Saturday, January 20, 2018

மட்டன் முர்தபா / Mutton murthaba


 தேவையான பொருட்கள்;-
முதலில் மேல் மாவிற்கு -
மைதா மாவு - அரைக்கிலோ
தேவைக்கு உப்பு, தண்ணீர்
சீனி - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
 சேர்த்து கலந்து நன்கு பிசைந்து மூடி வைக்கவும்.
1 மணி நேரம் குறைந்தது இருக்கட்டும்.  

இனி உள்ளடக்கத்திற்கு:-
மட்டன் கொத்தியது கால் கிலோ
வெங்காயம் பொடியாக நறுக்கியது - அரைக்கிலோ
தக்காளி - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1/2  தேக்கரண்டி
கரம் மசாலா - 2+2 தேக்கரண்டி
கறி மசாலா - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1.2 தேக்கரண்டி
சோம்பு ,சீரகத்தூள் - தலா அரை தேக்கரண்டி
தயிர் - ஒரு  மேஜைக்கரண்டி
மல்லி,புதினா நறுக்கியது - சிறிது
முட்டை - 3 ( உப்பு,மிளகுத்தூள் சிறிது)
எண்ணெய் ,நெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.

செய்முறை:-
கொத்துக்கறியை அலசி தண்ணீர் வடித்து குக்கரில் போட்டு, கறி மசாலா,கரம் மசாலா 1/4 தே.க, தயிர் ,இஞ்சி பூண்டு 2 தே.க,உப்பு சேர்த்து 3 விசில் விட்டு வேக வைக்கவும்.
 ஆவி யடங்கியதும் திறந்து தண்ணீர் இருந்தால் வற்ற வைக்கவும்.
 வெங்காயம்,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும் ,2 தே.க இஞ்சி பூண்டு .தக்காளி,உப்பு சேர்த்து மசிய விடவும்.
 தூள் வகைகள் சேர்க்கவும்.
 நன்கு பிரட்டி விடவும். சிறிது வாடை மடங்கட்டும்.
 கரம் மசாலா சேர்க்கவும்.
 வேக வைத்த கொத்துக்கறி சேர்த்து வதக்கவும்.உப்பு சரி பார்க்கவும்.
 மல்லி,புதினா  இலை சேர்த்து  பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
 உள்ளடக்கம் தயார்.
 பிணைந்து வைத்த மாவைப் 12 உருண்டைகளாகப் பிரித்து வைக்கவும்.
 முட்டை அடித்து தயாராக வைக்கவும்.
 ஒரு உருண்டை எடுத்து சிறிது எண்ணெய் தடவி மெல்லிய வட்டமாகப் பரத்தவும்.


 முட்டைக்கரைசல் 3 தேக்கரண்டி விட்டு ,2 மேஜைக்கரண்டி கொத்துக்கறி உள்ளடக்கம் வைக்கவும்.
 இரு புறம் பக்கவாட்டில் மடக்கி மேலும் கீழும் மடக்கவும்.




 தவாவில் சிறிது எண்ணெய் நெய் விட்டு பொறுமையாக மடித்து வைத்த அனைத்து முர்தபாவையும் சுட்டு எடுக்கவும்.

 சுவையான அசத்தலான முர்தபா தயார்.

சும்மாவே சாப்பிடலாம்.ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்..விரும்பினால் ப்லைன் சால்னாவுடனும் பரிமாறலாம்.

2 comments:

athiraமியாவ் said...

ஆஹா சூப்பரா இருக்கு ஆசியா.. இதேபோலதான் நானும் செய்வேன் ஆனா முட்டை சேர்த்திருப்பது புதுமுறையாவும் நன்றாகவும் இருக்கு... இந்த வீக்கெண்ட் செய்து பார்க்கப்போறேன்.

பரிவை சே.குமார் said...

படங்களில் பார்க்க நல்லாயிருக்கு.
இதெல்லாம் தாங்கள் செய்து தந்தால் சாப்பிடலாம் அக்கா... :)