Friday, February 16, 2018

சிறப்பு விருந்தினர் பகிர்வு 36 - திருமதி முன்சிலா அனஸ் / சிக்கன் ஃப்ராங்கி / Guest post -36 / Mrs.Munsila Anas / Chicken Frankie

இன்றைய சிறப்பு விருந்தினர் திருமதி.முன்சிலா அனஸ் ,மகிழ்ச்சியான இல்லத்தரசி, கணினி அறிவியல் பட்டதாரி, அவர் நம்முடன் பகிரப்போகும் குறிப்பு சிக்கன் ஃப்ராங்கி.


அவர் தன்னுடைய சுய அறிமுகமாகக் குறிப்பிடுவது.
நான்  (முன்சிலா பாத்திமா) மகிழ்ச்சியான இல்லத்தரசி. சொந்த ஊர் திருநெல்வேலி மேலப்பாளையம், தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு  நஹ்தியா (5) என்ற பெண் குழந்தையும் , ஜுல்பிகார் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். சமையல் எல்லாம் செய்வதோடு சரி. சாப்பிடுவது எல்லாம் சிறிது தான். என் சமையல் ஆர்வத்திற்கு காரணம் என் கணவர் தான். என் சமையலை அவ்வப்போது சுவைத்து பார்த்து Review &Comments சொல்லுவது என் மச்சான் தமீம் அன்சாரி மற்றும் அவர் மனைவி அஸ்மத் தான்!
அவர் ஆரம்பித்துள்ள புதிய ஆங்கில வலைப்பூ லின்க் இதோ !
முன்சிலா தன்னுடைய குடும்ப புகைப்படத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.அனைவர் சார்பாகவும் அன்பான  நல்வாழ்த்துக்கள் மா.
அருமையான குறிப்பை அனுப்பி தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிமா.
சிக்கன் ப்ராங்கி
தேவையான பொருட்கள்:
சிக்கன் (எலும்பு இல்லாதது) - 3௦௦ கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு 
எண்ணை - சிறிதளவு
பட்டை/கிராம்பு தூள் - சிறிதளவு
கோஸ் - 1௦௦ கிராம்
காரட் பெரியது - 2 
வெங்காயம் - 1௦௦ கிராம்
மைதா மாவு - 3 கப்
முட்டை - 3
தந்தூரி மயோன்னிஸ் - தேவைக்கு

செய்முறை : 
மைதா மாவுடன் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து Soft ஆக குழைத்து கொள்ளுங்கள். 
இறுதியில் எண்ணை சேர்த்து மறுபடியும் பிணைந்து கொள்ளுங்கள். லேசான துணியை கொண்டு மூடி ஒரு அரை மணி நேரம் வைக்க வேண்டும். 
ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பட்டை/கிராம்பு தூள் சேர்த்து, மணம் வந்தவுடன், சிக்கனை சேர்க்கவும்


அதனுடன் மிளகாய் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து, வேக விடுங்கள். 


நன்றாக வெந்த பிறகு சிறிதாக உதிர்த்து கொள்ளுங்கள்.   
                  

கோஸ் மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி சிறிது எண்ணை விட்டு வதக்கி கொள்ளுங்கள். காரட்டை நீளமாக துருவி கொள்ளுங்கள். 


இந்த மூன்றையும் சிக்கனில் போட்டு, மயோன்னிஸ் சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ளுங்கள் 



மைதாவை மெல்லிதாக பரத்தி கொள்ளுங்கள். 
மூன்று முட்டையுடன் உப்பு சேர்த்து கலக்கி வைத்து கொள்ளுங்கள்.

தோசை கடாயில் பரத்திய மிதவை ஒரு பக்கம் முட்டை தடவி சுட்டு எடுத்து கொள்ளுங்கள். 


முட்டை தடவிய பக்கத்தில் சிக்கன் கலவையை Stuff செய்து சுருட்டி கொள்ளுங்கள். 



சுவையான ப்ராங்கி தயார்!! 
நீங்களும் செய்து பாருங்க. பார்த்தவுடன் எடுத்துச் சாப்பிட தோன்றுகிறது.


சூப்பர் குறிப்பு. பகிர்வுக்கு மனமார்ந்த மகிழ்ச்சி. நன்றி.
மீண்டும் அடுத்த சிறப்பு விருந்தினர் பகிர்வில் சந்திப்போம். 

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

2 comments:

Hajee Masthan said...

அருமையான பதிவு. மென்மேலும் பதிவினை பதிவிட மனமார்ந்த வாழ்துக்கள். திருமதி. முன்சிலா அனஸ்.

பரிவை சே.குமார் said...

புதுமையான ஐட்டமா இருக்கே....
விரிவாய்... விளக்கமாய் படங்களுடன்...
வாழ்த்துக்கள் இருவருக்கும்....