Wednesday, February 14, 2018

வாழைப்பழ கப் கேக் / பனானா மஃபின் / Banana muffin ( Air fried)

இன்றோடு என்னுடைய இந்த சமைத்து அசத்தலாம் வலைப்பூ ஆரம்பித்து 8 வருடங்கள் பூர்த்தியாகிறது.  வீட்டில் செய்யும் என் அன்றாட சமையலை பொழுது போக்காய் இங்கே பகிர்ந்து வந்தேன்.
இன்று வரை என்னுடன் பயணிக்கும், வருகை புரியும் அனைத்து அன்பான நட்புகளுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சிகலந்த நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

பனானா மஃபின் செய்முறை :-
தேவையான பொருட்கள்;-
கோதுமை மாவு - அரை கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பட்டைத்தூள் - 1/4 தேக்கரண்டி
வாழைப்பழம் - 1
வெனிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
முட்டை - 1
சீனி - கால் கப்
எண்ணெய் - கால் கப்
பால் - 2 மேஜைக்கரண்டி
மேலே தூவ பொடித்த சீனி, பட்டைத்தூள் சிறிது.
பரிமாற தேன் - தேவைக்கு.

செய்முறை:-
முதலில் ஒரு பவுலில் முட்டை,சீனி,எண்ணெய் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
அடுத்து அத்துடன் வெனிலா எசன்ஸ் , பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து அடிக்கவும்.
அதனுடன் கோதுமை மாவு,பேக்கிங் பவுடர், பட்டைத்தூள் சேர்க்கவும்.
கல்ந்து பார்க்கவும். திக்காக இருந்தால் 2 மேஜைக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஏர் ஃப்ரையரை 200 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
மஃபின் கப்பில் முக்கால் அளவு மாவை எடுத்து வைக்கவும்.5 மஃபின் அளவு வரும்.
அதனை ட்ரேயில் அடுக்கி ஏர் ஃப்ரையரில் வைக்கவும். வெப்ப நிலையை 180 டிகிரி 10 நிமிடம் செட் செய்யவும்.
10 நிமிடம் ஆனதும் திறந்து வெந்து விட்டதை உறுதி செய்து கொள்ளவும்.
விரும்பினால் மேலே பொடித்த சீனி,பட்டைத்தூள் சிறிது தூவவும்.
அரை மணி நேரம் கழித்து கப்பில் இருந்து ஆறிய பின்பு எடுக்கவும்.
தேனுடன் பரிமாறவும்.
சுவையான வாழைப்பழ கப் கேக் தயார்.
என்னுடைய செய்முறை வீடியோ பெட்டர் பட்டரில் இதோ !
 அதனை இங்கே உங்கள் அனைவருக்காகவும் பகிர்கிறேன்.

இதே போல் நீங்கள் ஓவனிலும் செய்யலாம்.செய்து பாருங்க. ரொம்ப ஈசி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

8 comments:

ராமலக்ஷ்மி said...

எட்டு வருட நிறைவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எத்தனையோ பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்தப் பயணம் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும்.

அருமையான குறிப்பு. நான் மைதாவில் சற்றே வேறு மாதிரி செய்வதுண்டு. கோதுமை மாவில் முயன்றிடுகிறேன்.

Asiya Omar said...

மிக்க நன்றி ராமலஷ்மி, வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.

Munsila Fathima said...

வாழ்த்துக்கள் chachi

வெங்கட் நாகராஜ் said...

எட்டு வருடம்... மனம் நிறைந்த வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஆசியா.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அருமையான வாழைப்பழ கப்
கேக்.

மனோ சாமிநாதன் said...

எட்டாம் ஆண்டு நிறைவிற்கு இனிய வாழ்த்துக்கள் ஆசியா!

Asiya Omar said...

Munsila Fathima மிக்க நன்றி.
வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி.
கோமதிக்கா மிக்க நன்றி.
மனோ அக்கா மிக்க நன்றி.
தங்கள் அனைவரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

S.M.Khaja Mohideen said...

மாஷா அல்லாஹ் நமது ஊரில் அதிகமான திறமைசாலிகள் இருக்கிறார்கள் நமக்குதான் தெரியல்ல.அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

Khaja Mohideen.