Tuesday, February 27, 2018

வெந்தயக்கீரை பருப்பு / Dal Methi

 ஆரோக்கியமான குறிப்பு. இது செய்து வருடமாகிறது,என்னுடைய சேமிப்பை  திருப்பி பார்க்கும் பொழுது ஃபைலில் இருந்தது, எடுத்து போட்டாச்சு.அதுவும் வீட்டுத்தொட்டியில் கண்ணாகப் பார்த்து பொன்னாக வளர்த்து எடுத்தது.




 தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை ஒரு கட்டு
பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு - அரை கப்
நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய தக்காளி - 1
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 அல்லது 2
நறுக்கிய பூண்டு - 6 பற்கள்
மஞ்சள் தூள் - கால் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
தாளிக்க :-
எண்ணெய், நெய் - தலா 2 தேக்கரண்டி
கடுகு,சீரகம் - தலா கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - கிள்ளியது 2
நறுக்கிய வெங்காயம் - பாதி.
செய்முறை:-
 கீரையை காம்பு நீக்கி ஆய்ந்து, மண் போக அலசி எடுக்கவும்.
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பருப்பை ஊற வைத்து எடுக்கவும்.
அதனை ஒரு பாத்திரத்தில் தேவைக்கு தண்ணீர் , மஞ்சள் சீரகத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய்,பூண்டு சேர்த்து வேக வைக்கவும்.குக்கரிலும் வெந்து எடுக்கலாம். 
பருப்பு நன்றாக வெந்து வரும் பொழுது நறுக்கிய கீரை சேர்த்து வேக வைக்கவும்.

கீரை  நன்றாக வெந்ததும்  உப்பு சிறிது தேவைக்கு, தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும். கூட்டு போல் இருக்க வேண்டும்.

தாளிக்க எண்ணெய் நெய் விடவும், கடுகு,சீரகம் தாளிக்கவும்.வற்றல் கிள்ளிப் போட்டு ,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வேக வைத்த கீரை பருப்பில் சேர்க்கவும்.கலந்து பரிமாறவும்.
சுவையான சத்தான வெந்தயக்கீரை பருப்பு தயார்.
சாதம் சாப்பாத்தியுடன் பரிமாறலாம்.




No comments: