Saturday, February 3, 2018

பேரீச்சம்பழ கேக் முட்டை சேர்த்தும் சேர்க்காமலும்/ Dates cake with egg & eggless


பேரீச்சம் பழ கேக் முட்டை சேர்க்காமல்
தேவையான பொருட்கள் ;-
மைதா அல்லது கோதுமை மாவு - 1 கப்
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பேரீச்சை கொட்டை நீக்கி பொடியாக அரிந்தது - 1 கப்
பால் - அரை கப்
எண்ணெய் - அரை கப்
சீனி - அரை கப் ( இனிப்பு அதைகம் தேவை என்றால் சிறிது கூட்டிக் கொள்ளலாம்)
விரும்பினால் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி.
செய்முறை :-
முதலில் பால், சீனி பொடித்தது, பேரீச்சை சேர்த்து கலக்கவும்.
சீனி நன்கு கரைந்து பேரீச்சையும் மசிய வேண்டும்.
எண்ணெய் சேர்த்து நுரைக்க அடிக்கவும்.
மாவுடன் பேக்கிங் சோடா கலந்து அரித்து வைக்கவும்.
அந்த மாவை மெதுவாக பேரீச்சம் பழக்கலவையில் போட்டு மெதுவாக பிரட்டினாற் போல் கலக்கவும்.

இப்பொழுது பேக்கிங் செய்ய மாவு தயார்.
ஒரு பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட் விரித்து சிறிது எண்ணெய் தடவவும். அல்லது சிறிது வெறும் ட்ரேயில் எண்ணெய் மைதா கலந்து தடவவும். கேக் ஒட்டாமல் வரும்.
ஓவனை 180 டிகிரிக்கு 10 நிமிடம்  முற் சூடு செய்யவும்.

30-40 நிமிடம் பேக் செய்து எடுத்தால் பேரீச்சம் பழம் கேக் முட்டை சேர்க்காமல் தயார்.



ஆற விட்டு துண்டு போட்டு எடுத்து வைக்கவும். தேவைக்கு எடுத்து பரிமாறவும்.

சுவையான பேரீச்சம் பழ கேக் முட்டை சேர்க்காமல் செய்து அசத்தியது. வருடக்கணக்கில் இந்த ரெசிப்பி பைலில் இருந்து இன்று தான் நேரம் வாய்த்தது.

பேரீச்சம் பழ கேக் முட்டை சேர்த்து :-
தேவையான பொருட்கள்;-
மைதா மாவு - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
மிகப் பொடியாக  நறுக்கிய பேரீச்சை - ஒரு கப்
பொடித்த சீனி - அரை கப்
எண்ணெய் - அரை கப்
பால் - அரை கப்
விரும்பினால் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி.


தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.
பால்,சீனி,பேரீச்சை சேர்த்து அடிக்கவும்.

முட்டை சேர்த்து மீண்டும் அடிக்கவும்.
 
எண்ணெய் சேர்த்து அடிக்கவும்.

மாவு பேக்கிங் பவுடர் சேர்த்து அரித்து வைக்கவும்.

மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிரட்டினாற் போல் விரவவும்.

பேக்கிங் ட்ரே தயார் செய்யவும்.
மாவுக்கலவையை ஒரு போல் விடவும்.
ஓவனை முற்சூடு செய்து 180 டிகிரிக்கு 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான பேரீச்சம் பழம் கேக் முட்டை சேர்த்தும் செய்து பார்த்தது. சுவை சூப்பர்.

 எடுத்துக் கோங்க, நான் ஒரு முட்டை தான் சேர்த்தேன். நீங்கள் விரும்பினால் 2 முட்டை சேர்க்கலாம்.


ஆற விட்டு கட் செய்து பரிமாறவும்.



4 comments:

வெங்கட் நாகராஜ் said...

பேரீச்சம்பழ கேக் - பார்க்கும்போதே சுவைக்கத் தோன்றுகிறது.

நன்றி.

athiraமியாவ் said...

ஆஹா.. இரண்டுமே அருமை.. ஆனா சொவ்ட் குறைவாக இருப்பதைப்போல ஒரு பீலிங் எனக்கு..

Asiya Omar said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

அதிரா மியாவ் வருகைக்கு மகிழ்ச்சி. நிஜமாகவே சாஃப்டாக இருந்தது. படம் தான் சரியாக இல்லையோ?

Saratha J said...

இரண்டு வகையான கேக் செய்முறைகள் மிக அருமை.