Monday, February 19, 2018

ஊறுமா / Oorma

 தேவையான பொருட்கள்;-
பச்சரிசி -50 கிராம் ஊற வைத்து மைய அரைக்கவும்.
சீனி - 100- 150 கிராம் 
ஒரு கப் தேங்காய்ப்பால்
நெய் -1டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு-10,உலர் திராட்சை-10 வறுத்துப் போட.
ஏலக்காய் -3,பட்டை -2 சிறிய துண்டு.
முட்டை-1
பின்ச் உப்பு
செய்முறை:-
 அரிசியை 1-2  மணி நேரம் ஊற வைக்கவும்.
சிறிது தண்ணீர், ஊறிய அரிசி மிக்ஸி ஜாரில்  சேர்த்து மைய அரைக்கவும்.
 அரைலிட்டர் தண்ணீரில் பட்டை ஏலக்காய் சேர்த்து சூடு செய்யவும். அரைத்த பச்சரிசியை கரைத்து சூடான நீரில் சேர்த்து மெதுவாக கட்டி பிடிக்காமல் கிளறவும்
 சீனி சேர்க்கவும்.தண்ணீர் போல் ஆகும்.தேங்காய்ப்பால் சேர்த்து சிம்மில் வைக்கவும்.
 முட்டை அடித்து கொடி போல் ஊற்றவும்.
நெய்யில் முந்திரி ,திராட்சை வறுத்து மேலே போடவும்.
 சுவையான ஊறுமா தயார்.
 தோசை இடியாப்பத்துடன் ஊற்றி சாப்பிடலாம்.சூப்பராக இருக்கும்.


3 comments:

athiraமியாவ் said...

ஓ என்ன இது பாயாசம் போல இருக்கும் என நினைச்சென்.. முடிவில் சொதிபோல ஆக்கிட்டீங்க.. கேள்விப்பட்டதில்லை இப்படி ..

Asiya Omar said...

அதிரா இது எங்க ஊரில் இனிப்புக்கு இப்படி செய்வாங்க. தோசை,இடியாப்பம் கூட சாப்பிடலாம்.

கோமதி அரசு said...

முட்டை இல்லாமல் செய்துப் பார்க்கிறேன்.