Wednesday, March 21, 2018

வாழைத்தண்டு கூட்டு / Banana stem kootu

வாழைத்தண்டுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும்.சத்தானது. இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க.

 தேவையான பொருட்கள்;-
வாழைத்தண்டு - 300 கிராம்
பருப்பு - 75 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி நடுத்தரமானது - 1
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
மல்லி,கருவேப்பிலை -சிறிது
உப்பு - தேவைக்கு.
அரைக்க:-
தேங்காய்த்துருவல் - 4 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - கால் அல்லது அரை தேக்கரண்டி
தாளிக்க :-
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிது
கிள்ளிய வற்றல் -1
கறிவேப்பில்லை - 2இணுக்கு.
செய்முறை:-
வாழைத்தண்டை மேலே உள்ள நார் உரித்து இளம் தண்டாக எடுத்துக் கொள்ளவும்.

அதனை நார் நீக்கி பொடியாக நறுக்கி எடுக்கவும்.
நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்.கருக்காமல் இருக்கும்.

குக்கரில் ஊற வைத்த பருப்பு,நறுக்கிய வாழைத்தண்டு, வெங்காயம், தக்காளி,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து, தேவைக்கு தண்ணீர் சேர்த்து.   இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய், மிளகாய்,கால் தேக்கரண்டி சீரகம்  கொர கொரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.
கலந்து கொதிக்க வைக்கவும்.தேவைக்கு உப்பு சேர்க்கவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.
தாளித்துக் கொட்டவும்.கலந்து விட்டு பரிமாறவும்.
சுவையான சத்தான வாழைத்தண்டு கூட்டு தயார்.
சூடான சாதம், சப்பாத்தி,ரசம்,வறுவல்,அப்பளத்துடன் பரிமாறலாம்.


2 comments:

athira said...

ஓ இது வித்தியாசமாக இருக்கு ஆசியா.. வாழைத்தண்டு ரெசிப்பி எங்காவது கிடைக்குமோ என நினைச்சுக் கொண்டிருந்தேன்.. நான் வதக்கி .. வத்தல் குழம்புபோல செய்தேன் அதுவும் சூப்பரா வந்துது.

Asiya Omar said...

ஓ அப்படியா சூப்பர். இனி செய்து பார்க்கிறேன்.வருகைக்கு மகிழ்ச்சி அதிரா.