Friday, March 9, 2018

காலிப்ளவர் தக்காளி முட்டை / Cauliflower tomato egg


தேவையான பொருட்கள்;
காலிப்ளவர் - 300 கிராம்
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 இணுக்கு
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு தட்டியது - ஒரு தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் -1
மிளகாய்த்தூள் -1/4 அல்லது 1/2 தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)
நறுக்கிய பெரிய தக்காளி - 1
முட்டை- 2
உப்பு,மிளகுத்தூள் - தேவைக்கு
நறுக்கிய மல்லி இலை சிறிது.
செய்முறை:-
காலிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும்.சிறிது நேரம் மூடி வைத்து வடிகட்டவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்,மிளகாய் போட்டு வதக்கவும்.இஞ்சி பூண்டும் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் மிளகாய்த்தூள் காரத்திற்கு சேர்க்கவும்.காலிப்ளவர் சேர்த்து பிரட்டி விடவும்.
 தக்காளி சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து நன்கு மசிய விடவும்.
சிறிது ஒன்று சேர்ந்து வேகட்டும்.
 வதங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைத்த முட்டை சேர்க்கவும். மூடிசிறிது வேக விடவும்.
 நன்கு வெந்தவுடன் உதிரியாக பிரட்டி விடவும்.நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.

 பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

சுவையான காலிப்ளவர் முட்டை தக்காளி தயார்.
சூடான சாதத்துடன்,ரசம், பக்க உணவாகவும்,சப்பாத்தியோடும் கூட அருமையாக இருக்கும்.



2 comments:

ராஜி said...

பகிர்வுக்கு நன்றி. ஒரு பொரியல் தேத்த ஐடியா கொடுத்ததுக்கு...

Asiya Omar said...

நன்றி ராஜி,வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.