Wednesday, March 7, 2018

மீன் ஸ்டூ / Fish Stew


சிக்கன் ஸ்டூ போல் தான் மீன் ஸ்டூவும் . பொதுவாக கேரளத்தில் தேங்காய்ப்பால் மட்டும் சேர்ப்பாங்க, இது தவிர நான் ஒரு பொருளும் சேர்த்து செய்தேன் செமை டேஸ்ட்.ஆப்பம்,இடியாப்பத்திற்கு சிக்கன், மட்டன் குழம்பு செய்வோம், மாறுதலாக இதையும் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்;-
முள்ளில்லாத மீன் துண்டுகள் - 300 கிராம்
மீனில் பிரட்டி வைக்க:-
மிளகாய்த்தூள் - 1/2 -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி (பொரிக்க)
இனி தாளிக்க:-
தேங்காய் எண்ணெய் - 2  மேஜைக்கரண்டி
கடுகு - 1 /2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம் (பெரியது அல்லது சின்ன வெங்காயம்)
கீறிய பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
நறுக்கிய பூண்டு பற்கள் - 5
அதே அளவு நறுக்கிய இஞ்சி துண்டு
கருவேப்பிலை 2இணுக்கு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி(விரும்னினால்)
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி  சிறியது -1
எலுமிச்சை பழம் - பாதி.
உப்பு சுவைக்கு.
தேங்காய்ப்பால் -மூன்றாம், இரண்டாம் தடவை எடுத்தது 2 கப்
முதல் கெட்டி பால் 1 கப்
இது தவிர ஃப்ரெஷ் கிரீம் - 2 -3 மேஜைக்கரண்டி (நான் சேர்த்தது, ஹோட்டலில் ஒரு முறை சாப்பிட்ட பொழுது கீரீம் சுவை தெரிந்தது, அதனால் நானும் சேர்த்தேன், அதன் பின்பு ஸ்டூ கெட்டியாக ஆனது)
 செய்முறை:

மீனை வாங்கி துண்டு போட்டு நன்கு அலசி வைக்கவும்.

 மேற்கூறிய படி பொருட்கள் சேர்த்து மீனை அரை மணி நேரம் பிரட்டி வைக்கவும்.
 பின்பு பக்குவமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கருவேப்பிலை பொரியவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்க்கவும், நன்கு வதக்கவும்.
இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப்பால் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்பு பொரித்த மீன் சேர்க்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சூப்பராக இருக்கும் எடுத்துச் சாப்பிட. நன்கு கொதிக்க விடவும்.
 மீன் தேங்காய்ப்பால் சேர்த்த பொருட்களோடு சேர்த்து நன்கு கொதி வரட்டும்.மிளகுத்தூள் காரம் தேவைப்பட்டால் சேர்க்கவும்.

 இறுதியாக முதல் தேங்காய்ப்பால் சேர்க்கவும். நுரை கூடும்.
 ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பாதி எலுமிச்சைப் பிழிந்து அடுப்பை அணைக்கவும்.மேலே
நறுக்கிய கருவேப்பிலை சேர்க்கலாம்.
சுவையாக சூப்பராக தயாராகிவிட்டது. ஆப்பம், இடியாப்பம், வெறுஞ்சோறு உடன் பரிமாறலாம்.

பரிமாறி அசத்துங்க.



2 comments:

ராஜி said...

செஞ்சு பார்க்கலாம்

Hajee Mohamed Masthan said...

பிஷ் ஸ்டிவ் - உங்களுடைய உபசரிப்பு முதல் நான் இதனை உண்ட வரை உள்ள அனுபவம். சாலமோன் மீனுடன் பிஷ் ஸ்டிவ் முதல் முதலாய் உங்கள் கைவண்ணத்தில். கண்ணுக்கு குளிர்ச்சியாய், மூக்குக்கு மனமுமாய், வாயிக்கு ருசியாய்... இதனை இடியாப்பம் மற்றும் ஆப்பத்துடன் சேர்ந்து சாப்பிட உகந்த உணவு. தவறாமல் இந்த பதிவினை கண்டவர்கள் செய்முறையை பின்பற்றி சமைத்து ருசித்து உங்களுடைய அனுபவத்தை இங்கு பகிரவும்.