Saturday, March 24, 2018

மட்டன் முருங்கைக்காய் ஆணம் / Mutton drumstick salna

முருங்கைக்காயை, பருப்பில், சாம்பாரில்,புளிக்குழம்பில் பொதுவாக போட்டு செய்வோம், எங்க ஊரில் மட்டனில் தான் அதிகம் போட்டு சாப்பிட பிரியப்படுவாங்க.நீங்களும் இந்த முறையில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்:-
மட்டன் - அரைக்கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 -3 தேக்கரண்டி ( பாதி விரவ, பாதி வதக்க)
வீட்டு கறிமசாலாத்தூள் - 2 மேஜைக்கரண்டி
தயிர் - 2மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி ( ஏலம் பட்டை கிராம்புத்தூள்)
சோம்பு சீரகத்தூள் - தலா கால் -அரை தேக்கரண்டி ( விரும்பினால் சேர்க்கவும்,மசாலாவில் இது இருக்கும்)
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய மல்லி இலை - சிறிது
முருங்கைக்காய் - 2
எண்ணெய் - 3-4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
அரைக்க :-
தேங்காய்த்துருவல்  அரை கப்
முந்திரி பருப்பு - 5

செய்முறை:-
கறியை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். 
கறி மசாலா, இஞ்சி பூண்டு, தயிர் உப்பு சேர்த்து விரவி வைக்கவும். 
முருங்கைக்காய் நறுக்கி தயாராய் இருக்கட்டும். 

கறியை விரவி வைக்கவும்.
முருங்கைக்காயை சிறிது மசாலாத்தூள், தேவைக்கு தண்ணீர் சேர்த்து  வேக வைக்கவும்.
முருங்கைக்காய் வெந்த பின்பு அடுப்பை அணைக்கவும்.
வெங்காயம் தக்காளி நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி,இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.
நன்கு வதக்கவும்.
தக்காளி,மிளகாய், மல்லி இலை சேர்த்து உப்பும் சேர்த்து வதக்கவும்.
தேவைக்கு அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள், கால் தேக்கரண்டி சீரக் சோம்புத்தூள் சேர்க்கவும்.
நன்கு பிரட்டி வதக்கவும்.
ஊற வைத்த கறியைச் சேர்க்கவும்.
தேவைக்கு தண்ணீர் ஒரு கப் சேர்த்து மூடி 5 விசில் விட்டு மீடியம் நெருப்பில் வேக வைக்கவும்.
தேங்காய் முந்திரி அரைத்து தயாராய் வைக்கவும்.
வேக வைத்த முருங்கைக்காய் தயார்.
கறியும் வெந்து விட்டது.
வேக வைத்த முருங்கைக்காய் சேர்க்கவும்.
அரைத்த தேங்காய் சேர்க்கவும்.
நன்கு கொதி வரவும். சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.நறுக்கிய மல்லி இலை சிறிது சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும்.
சுவையான மட்டன் முருங்கைக்காய் ஆணம் தயார்.
எங்க ஊரில் வெறுஞ்சோறு, கறியாணம், கத்திரிக்காய் ஆணம் ,சுருட்டு கறி என்பது பொதுவாக செய்யும் மெனு.

1 comment:

தமிழ் திரட்டிகள் said...

தமிழ் வலைதிரட்டிகளும் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது மற்றும் பதிவுகளை சுலபமாக இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
http://thiratti.tamilblogs.in/