Tuesday, March 13, 2018

புளிக்குழம்பு / Puli Kulambu


 தேவையான பொருட்கள் ;-
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம் - தலா அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 இணுக்கு
நறுக்கிய சின்ன வெங்காயம் - 100 கிராம் ( 6 சிறிய வெங்காயம் எடுத்து வைக்கவும்)
நறுக்கிய பூண்டு -  6-8 பற்கள்
கத்திரிக்காய் - 150 கிராம்
முருங்கைக்காய் - 1 அல்லது 2
தக்காளி  - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு (கரைக்கவும்)
உப்பு - தேவைக்கு.
நறுக்கிய மல்லி இலை - சிறிது.

அரைக்க:-
தேங்காய்த்துருவல் கால் கப்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 3 தேக்கரண்டி
சீரகத்தூள்  - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6

செய்முறை:-
ஒரு அடிகனமான பத்திரத்தில் எண்ணெய்  விடவும்.
சூடானவுடன் கடுகு,உ.பருப்பு,வெந்தயம் பொரிய விடவும்.

 கருவேப்பிலை சேர்க்கவும்.
 நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு பற்கள்  சேர்த்து வதக்கவும்.
 கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
 வதங்கி வரும்பொழுது தக்காளி சேர்க்கவும்.
 உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.மூடி   வேக விடவும்.
மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.  புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்கு ஒன்று சேர்ந்து வேகட்டும்.

அரைக்க வேண்டியதை வறுத்து  அரைத்து எடுக்கவும்.
வாணலியில் தேங்காய்த்துருவல் லேசாக வெதுப்பவும், அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,சீரகத்தூள் சேர்த்து வெதுப்பவும்.
 அதனை ஆறவிட்டு அத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும்.விரும்பினால் இரண்டு பல் பூண்டும் சேர்க்கலாம்.

காய்கள் நன்கு வெந்து வந்தவுடன் அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
 நன்கு கொதித்து பச்சை வாடை மடங்க வேண்டும்.
 சிம்மில் வைத்து மூடியை லேசாக திறந்தது போல் வைக்கவும்.எண்ணெய் மேலே வரும்.நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்,.
சூடான சோறு,புளிக்குழம்பு, பொரியல் அல்லது  உருளை வறுவல்,அப்பளம்  என்று பரிமாறி அசத்தவும்.
பின் குறிப்பு:-
குழம்பு கூட்டி கொதிக்க வைத்து வெந்த பின்பு கடைசியில் தாளித்தும் கொட்டலாம். நான் தாளித்து ,எல்லாம் சேர்த்து வேக வைத்து விட்டேன்.
உப்பு,புளி காரம் உங்கள் ருசிக்கு தக்க சேர்க்கவும்.

6 comments:

Sangeetha Nambi said...

Love Pulikuzhambu all the time :)

Jaleela Kamal said...

புளி குழம்பு மிக அருமை. அதுவும் முருங்கக்காய் சேர்த்தால் கேட்கவே தேவையில்ல்ல வாசனையாக இருக்கும்/ படிப்படியான சமையல் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்


எங்க வீட்டில் இன்று மதியம் முருங்கக்காய் பலாக்கொட்டை புளி குழம்பு, மோர் குழம்பு, உருளை வருவல், ரொம்ப நாள் கழித்து இன்று வெஜ் கோம்போ/

Asiya Omar said...

ஜலீலா ரொம்ப நாள் கழித்து உங்கள் வருகை.மிக்க மகிழ்ச்சி. நன்றி.

Asiya Omar said...

சங்கீதா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி.நன்றி.

கோமதி அரசு said...

நல்லா இருக்கிறது குழம்பு.

Asiya Omar said...

கோமதிக்கா வாங்க,கருத்திற்கு நன்றி. நேற்று 12 மணிக்கு போஸ்டிங் போட்டு விட்டு தூங்கச் சென்றேன்.இன்று அன்பான நட்புகள் வருகை பார்த்து மகிழ்ச்சி.நன்றி.