Thursday, March 22, 2018

இளநீர் வழுக்கைப் பாயாசம்/ இளநீர் புட்டிங் / Tender coconut kheer / Tender coconut pudding


தேவையான பொருட்கள் :-
இளநீர் ஒரு காயில் உள்ளது - 1 கப்
வழுக்கை ஒரு காயில் இருந்து எடுத்தது
சுண்டக்காய்ச்சிய பால் - 250 மில்லி
சீனி - 1-2 மேஜைக்கரண்டி ( சுவைக்கேற்ப)
தேங்காய்ப்பால் - அரை கப்
நெய் - 1 தேக்கரண்டி (வறுக்க)
பாதாம் முந்திரி பிஸ்தா - சிறிது
புட்டிங் போல் செய்வதாய் கொஞ்சம் கடல்பாசி காய்ச்சி சேர்க்கவும்.
செய்முறை:-

முதலில் இளநீர் வழுக்கை எடுத்து வைக்கவும்.

இளநீர் சிறிது சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.

பாலில்  இரண்டு ஏலக்காய் சேர்த்து சுண்ட காய்ச்சி ஆற வைக்கவும்.
நட்ஸ் வகைகள் ஊற வைத்து தோல் எடுத்து பொடியாக நறுக்கி எடுக்கவும்.


சிறிது நெய் விட்டு வறுத்து எடுக்கவும்.
பாலில் ஏலக்காய் எடுத்து விடவும்.
அரைத்த இளநீர் வழுக்கை, விரும்பினால் அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து சிம்மில் சிறிது நேரம்  வைத்து அணைக்கவும்.



சுவையான இளநீர் பாயாசம் தயார்.
விரும்பினால் சிறிது கடல்பாசி காய்ச்சி வடிகட்டி சேர்க்கலாம்.
புட்டிங் போல் வேண்டும் என்றால் இந்தக்கலவையில் கடல் பாசி காய்ச்சி வடிகட்டி கலந்து கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தும் பரிமாறலாம்.
இந்த அளவு இரண்டு அல்லது  மூன்று பேருக்கு வரும்.
சுவையான இளநீர் புட்டிங் தயார்.

2 comments:

Unknown said...

Hi aunty, I have come to your home when I was a kid.
Hope you remember my mom, she is a very close friend of your's to be exact your collegemate.
During college days you have given my mom a mixture of egg sugar powder. Please share those recipes too.
I'm not sure how can I contact you personally my mom would be very glad to be in contact with you again.
She still has the pics of yours taken near park at quarters premises.
- Arthi and Agalya.

Asiya Omar said...

அய்யோ ! எத்தனை வருடமாக உங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்திருக்கிறேன்
என் மகியோட பிள்ளைங்க தானே நீங்க. சோ ஸ்வீட்.
நிச்சயம் கொடுக்கிறேன். ரெசிப்பி ரெடியாக இருக்கு.ஸ்டெப் பிக்ஸ் உடன் கொடுக்க முயற்சி செய்கிறேன். முகநூலில் Asiya Omar. அல்லது asiyaomar@gmail.com மெயிலில் தொடர்பு கொள்ளவும்.தூத்துக்குடிக்கு அம்மா,அப்பா உன்னோடு வந்தாங்க,அப்புறம் பார்க்கலை.விரைவில் சந்திப்போம்.