Thursday, March 22, 2018

வெள்ளரி கோசம்பரி / Vellari Kosambari / Cucumber Kosambari


கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, வெள்ளரி ஈசியாக கிடைக்கும்.கேரட்,முட்டை கோஸ் சேர்த்து கோசம்பரி செய்வாங்க, அதே போல் வெள்ளரியில் செய்து பார்த்தேன். சூப்பர். சத்துக்கு சத்துமாச்சு, ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமுமாச்சு.ப்ரெஷாக செய்து உடனே பரிமாறவும். உடலிற்கு குளிர்ச்சி தரக் கூடியது.
தேவையான பொருட்கள்;-
வெள்ளரிக்காய் நறுக்கியது ஒரு கப் 
தேங்காய்த்துருவல் - அரை கப்
பாசிப்பருப்பு ஊற வைத்தது - 1-2  மேஜைக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் -1
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
நறுக்கிய மல்லி கருவேப்பிலை - சிறிது
உப்பு - சிறிது

செய்முறை:-
தேவையான பொருட்கள் தயார் செய்து கொள்ளவும்.

பாசிப்பருப்பை நன்கு ஊற வைத்து பச்சையாக சேர்ப்பதே நலம்.விரும்பினால் ஒரு கொதி விட்டு வடித்தும் சேர்க்கலாம். 

 எல்லாம் ஒரு பவுலில் கலந்து கொள்ளவும்.
 தேவைக்கு உப்பு சேர்க்கவும்.
 கலந்து பரிமாறவும். சும்மாவே முழு உணவாக ஒருவர் சாப்பிடலாம்.

No comments: