Sunday, March 18, 2018

வெள்ளரி மோர் கறி / Vellari moru curry

கோடைக்காலத்திற்கேற்ற சமையல். அடிக்கடி மோரு கறி செய்வதுண்டு, இங்கே பகிர இன்று தான் முடிந்தது.இது போல் வெண்பூசணியில் செய்யலாம்.
 தேவையான பொருட்கள் ;-
வேக வைக்க:-
வெள்ளரி - 300 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கீறிய பச்சை மிளகாய் - 1
தண்ணீர் - 1 கப்
உப்பு தேவைக்கு.
அரைக்க :-
தேங்காய் - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
தாளிக்க:-
தேங்காய்  எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
நறுக்கிய சின்ன வெங்காயம்  -  5
கிள்ளிய மிளகாய் வற்றல் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.

செய்முறை:-
 காய் வெட்டாக உள்ள வெள்ளரியை தோல் சீவிக் கொள்ளவும்.
 நன்கு அலசி எடுக்கவும்.
 நான்காக வெட்டி விதை நீக்கிக் கொள்ளவும்.

 சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 மஞ்சள் தூள், கீறிய மிளகாய் 1  ,தேவைக்கு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


அரை கப்   தேங்காய்த்துருவல் ,1/2 தேக்கரண்டி சீரகம்,1 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.


அரைத்து தயாராய் இருக்கட்டும்.
 வெள்ளரி நன்கு வெந்து வரும்.
 அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும்.

 நன்கு கொதித்து பச்சை வாடை அடங்கட்டும்.
 அடுப்பை அணைக்கவும்.
 கெட்டி தயிர் ஒரு கப் சேர்க்கவும்.
 கலந்து விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
 ஒரு கடாயில் தேங்காய்  எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு,வெந்தயம், கருவேப்பிலை,கிள்ளிய வற்றல்,நறுக்கிய சின்ன வெங்காயம்   சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
 தயார் ஆன  வெள்ளரி மோர் கறியில் கொட்டவும்.
 சுவையான சத்தான ஆரோக்கியமான வெள்ளரி மோர் கறி தயார்.
சூடான சோறு பக்க உணவுகளுடன் பரிமாறவும்.

3 comments:

கோமதி அரசு said...

வெண்பூசணி போட்டு மோர் குழம்பு செய்து இருக்கிறேன்.
வெள்ளரி போட்டு செய்தது இல்லை.
இன்று செய்து விடுகிறேன்.
வெள்ளரி இருக்கு மோர் இருக்கு.
நன்றி ஆசியா.
படங்கள் அழகு.

Asiya Omar said...

அக்கா வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி. செய்து பாருங்க.எல்லாருக்கும் பிடிக்கும்.

Asiya Omar said...

அக்கா உங்க வலைப்பூ நிறுத்தி பார்க்க முடியாமல் துடித்துக் கொண்டிருக்கிறது.என்ன பிரச்சனைன்னு தெரியலை.சரி பார்க்கவும். வேறு யாரிடமும் பார்க்கச் சொல்லி பாருங்க. எனக்குத்தான் அப்படியான்னு தெரியலை.