Sunday, April 22, 2018

ஜிகர்தண்டா / Jigarthanda

கோடைக்கேற்ற ஜில் ஜில் ஜிகர்தண்டா



இரண்டு பேருக்கு பரிமாற
தேவையான பொருட்கள்;-
ஊற வைத்த பாதாம் பிஸின் - அரை கப்
400 மில்லி பாலை சுண்டக்காய்ச்சவும் - ஒன்னரை கப்
நன்னாரி சர்பத் - 2 மேஜைக்கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் - 2 ஸ்கூப்
ஊற வைத்து  பொடித்த நட்ஸ் வகைகள் - சிறிது

செய்முறை:-
பாதாம் பிசின் 3-4  துண்டு எடுத்து முதல் நாளே  ஊற வைக்கவும்.
 பாலை சுண்டக்காய்ச்சி ஆற வைக்கவும்.
ஒரு அழகிய கண்ணாடி டம்ளரில் பாதாம் பிசின், நன்னாரி சர்பத் , சுண்டக்காய்ச்சிய பால் விட்டு அதன் மேல் வெனிலா ஐஸ்கிரீம் வைக்கவும். விரும்பினால் பொடித்த நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
நட்ஸ் தூவ விரும்பாதவர்கள் இப்படி ப்லைனாகவும் பரிமாறி அசத்தலாம்.

இப்தார் பார்டிகளில் மொத்தமாக இப்படி தயார் செய்து வைத்து பரிமாறும் பொழுது ஐஸ்கிரீம் வைத்து நட்ஸ் தூவி பரிமாறலாம்.
ஜில் ஜில் ஜிகர்தண்டா தயார். செமையாக இருக்கும்.



6 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஜில் ஜில் ஜிகர்தண்டா. இப்போது இருக்கும் வெய்யிலுக்கு ஏற்றது.

Tamil Us said...

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

Asiya Omar said...

வருகைக்கும் கருத்திற்கும்மிக்க மகிழ்ச்சி, நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்.

ராஜி said...

இம்புட்டு ஈசியா?!

Asiya Omar said...

செய்து ருசித்து விட்டு சொல்லுங்க. செமையாக இருக்கும்.

shameeskitchen said...

Super akka 😊