Tuesday, April 3, 2018

வெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry

இந்த வெங்காயத்தாள் ஈரோடு சங்ககிரியில் இருந்து பயணித்து இவ்வளவு ஃப்ரெஷாக அல் ஐன் வந்து சேர்ந்திருக்கு.ப்ரியமாக கொண்டு வந்து கொடுத்த திருமதி ப்ரியா மோகனுக்கு மிக்க நன்றி.என்னை அன்பா  அம்மான்னு கூப்பிடுவாங்க, அவங்களோட இரட்டையர்கள் என்னை இப்ப ஆயான்னு கூப்பிடுதுங்க. ஹா.ஹா.
 இனி எப்படி சுலபமாகஅதன் சத்தும் சுவையும் மணமும் மாறாமல் பொரியல் செய்தேன் பாருங்க.
தேவையான பொருட்கள்;-
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 2 -3 கப்
எண்ணெய் - 2 -3 தேக்கரண்டி
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் கிள்ளியது - 2
தேங்காய்த்துருவல் -3 -4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
செய்முறை:-
பூ வந்த வெங்காயத்தாளை நன்கு அலசி எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


 வாணலியில் எண்ணெய் விட்டு சூடானவுடன் தாளிக்க சொன்ன பொருட்கள் சேர்க்கவும்.
 பொரிந்தவுடன் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
 சிறிது உப்பு சேர்க்கவும்.
 நன்றாக வதக்கவும்.நறுக்கென்று இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கலாம்.
தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக பிரட்டவும்.
 அடுப்பை அணைக்கவும்.
சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல் தயார். சூடான சாதத்தில் பிரட்டியும் சாப்பிடலாம்,பொரியல் போல் பக்க உணவாகவும் பரிமாறலாம்.அப்படியே சாலட் போலும் சாப்பிடலாம்.

2 comments:

ராஜி said...

அருமை. ஈசியானதும்கூட

Tamil Us said...

அருமையான வெங்காயப்பூ சமையல்.. வாழ்த்துக்கள்

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US